LIC: 'எல்.ஐ.சி பெயரை யூஸ் செஞ்ச அம்புட்டுதேன்' - விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ்விட்ட ரியல் எல்.ஐ.சி
தனது படத்திற்கு எல்.ஐ.சி. எனப் பெயர் வைத்தமைக்கு எதிராக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுக்கு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து லவ் இஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். தவிர, எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கான இசையினை அனிருத் செய்ய, படத்தயாரிப்புப் பொறுப்பினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஏற்றுள்ளது. இந்நிலையில் லவ் இஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்னும் படத்தினை, எல்.ஐ.சி. எனக் குறிப்பிட்டு விளம்பரங்களும் செய்யப்பட்டன.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும்; படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எனப்படும் எல்.ஐ.சி நிறுவனம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், லவ் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பினை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும்; நோட்டீஸ் பெற்ற ஏழு நாட்களுக்குள் படத்தின் தலைப்பினை மாற்றாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், விக்னேஷ் சிவன் தனது புதிய படத்தின் பெயருக்கு, எல்.ஐ.சி எனப் பெயர் வைப்பதால் தங்கள் நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் வைத்து இருக்கும் மதிப்பு குறையும் எனவும் எல்.ஐ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பூ மற்றும் களவாணி படத்துக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன், எல்.ஐ.சி படத்தின் டைட்டிலை, தான் தனது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் 2015ஆம் ஆண்டு பதிவு செய்து வைத்திருப்பதாகவும், மீறி அதைப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்