RIP Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்.. மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..ரசிகர்கள் கண்ணீர்
RIP Daniel Balaji: வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய திடீர் மரணமானது திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்த வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய திடீர் மரணமானது திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத தலை சிறந்த வில்லனாக டேனியல் பாலாஜி விளங்கி வந்தார்.
முதன் முதலில் சித்தி நாடகத்தில் அறிமுகமான டேனியல் பாலாஜி படிப்படியாக சினிமாவில் வளர தொடங்கினார். இவர் நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் ஆவார்.
1975 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தரமணி திரைப்பட நிறுவனத்தில் தனது இயக்க படிப்பை முடித்தார். அதற்குப் பிறகு கமல்ஹாசனின் படத்தில் யூனிட் புரொடக்ஷன் மேனேஜராக தனது பயணத்தை தொடங்கினார். சின்னத்திரையில் வெளியான ராதிகாவின் சித்தி தொடரில் இவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் கிடைத்தது அதில் இவருடைய பெயர் டேனியல். அதற்குப் பிறகு இவருடைய பெயர் டேனியல் பாலாஜி என மாறியது.
ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் டேனியல் பாலாஜி அறிமுகமானார். அதற்குப் பிறகு காதல் கொண்டேன் திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்தார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென மிகப் பெரிய ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நடிப்பு அசுரனாக விளங்கி வரும் கமல்ஹாசனை மிரட்டும் அளவிற்கு டேனியல் பாலாஜி நடித்திருப்பார்.
அந்த கதாபாத்திரத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. அதற்குப் பிறகு பல படங்களில் இவர் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றி கண்டார்.
வெற்றிமாறன் இயக்கிய முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படத்தில் மெயின் வில்லனாக நடித்து மிகப்பெரிய உச்சத்தை அடைந்தார். இவர் நடித்த திரைப்படங்களில் இவருடைய கதாபாத்திரம் கட்டாயமாக ரசிகர் மத்தியில் பேசப்படும் அந்த அளவிற்கு தனது நடிப்பை ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுத்தி இருப்பார்.
நடிகர் விஜய்யோடு சேர்ந்து பைரவா பிகில் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். பொல்லாதவன் மற்றும் வேட்டையாடு விளையாடு இந்த இரண்டு திரைப்படங்களிலும் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இவருடைய வசன உச்சரிப்பிற்காகவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இறுதியாக கடந்த ஆண்டு அரியவன் என்ற படத்தில் டேனியல் பாலாஜி நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது பல மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் திடீரென இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி டேனியல் பாலாஜி உயிரிழந்தார். இவருக்கு 48 வயது மட்டுமே ஆகின்றது. டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைவரும் டேனியல் பாலாஜியின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்