தமிழ் சினிமா ரீவைண்ட்: சிறப்பான கதையால் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டான படம்.. மே 12 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழ் சினிமா ரீவைண்ட்: சிறப்பான கதையால் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டான படம்.. மே 12 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

தமிழ் சினிமா ரீவைண்ட்: சிறப்பான கதையால் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டான படம்.. மே 12 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 12, 2025 06:45 AM IST

மே 12ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த நாளில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈரத்த சில படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

சிறப்பான கதையால் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டான படம்.. மே 12 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
சிறப்பான கதையால் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டான படம்.. மே 12 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

சரவணன் இருக்க பயமேன்

எழில் இயக்கத்தில் உதயநிதி, ரெஜினா, சிருஷ்டி டாங்கே, சூரி, யோகிபாபு உள்பட பலர் நடித்து காமெடி படமாக உருவாகி 2017இல் ரிலீசான படம் சரவணன் இருக்க பயமேன். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்து ஹிட் படமாகவும் மாறியது. படத்தில் டி. இமான் இசையில் எம்புட்டு இருக்குது ஆசை என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகியது. அதேபோல் லாலா கடை சாந்தி என்ற குத்து பாடலும் வரவேற்பை பெற்றது

அழகர்சாமியின் குதிரை

சுசீந்திரன் இயக்கத்தில் காமெடி நடிகர் அப்புக்குட்டி, சரண்யா மோகன், இனிகோ பிரபாகரன், அத்வைதா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி ட்ராமா பாணியில் உருவாகி 2011இல் ரிலீசான படம் அழகர்சாமியின் குதிரை.

ஆனந்த விகடன் நாளிதழில் பிரபல எழுத்தாளர், வசனகர்த்தா பாஸ்கர் சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரை தொடர்கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. கிராமத்து பின்னணியில் எதார்த்தமான கதைகளத்தில் அமைந்திருந்த இந்த படம் விமர்சகரீதியாக பாராட்டை பெற்றதும் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.

மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு பின்னர், 2011 டொராண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இரண்டாவது தமிழ் படம் என்ற பெருமை பெற்றது. அத்துடன் சிறந்த படத்துக்கான தேசிய விருதும், அப்பகுட்டிக்கு சிறந்த துணை நடிகர் தேசிய விருதும் கிடைத்தது

இளையராஜா இசையில் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. படத்தின் அனைவரின் நடிப்பும் பாராட்டை பெற்றன. சிறப்பான கதையால் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டான படமாகவும் உள்ளது.

கொக்கி

பிரபு சாலமன் இயக்கத்தில் கரண்,பூஜா காந்தி, கோட்டா சீனிவாச ராவ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த ஆக்சன் திரைப்படமாக உருவாகி 2006இல் ரிலீசான படம் கொக்கி. வித்தியசமான திரைக்கதை, மேக்கிங் என புதுவித அனுபவமாக அமைந்திருந்த இந்த படம் விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது கமர்ஷியல் ஹிட்டானது. படத்தில் கோட்டா சீனவாசராவ் வில்லத்தனம், அவரது சிரிப்பு கவரும் விதமாக அமைந்திருந்தன. எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இந்த படம் கரணுக்கு வெற்றி படமாக அமைந்தது

6.2

வி. செந்தில் குமார் இயக்கத்தில் சத்யராஜ், சுனிதா வர்மா, வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க த்ரில்லர் பாணியில் உருவாகி 2005இல் ரிலீசான படம் 6.2. நடிகர் சத்யராஜின் உயரமான 6.2 இன்ச் என்பதை குறிக்கும் விதமாக படத்தின் டைட்டில் அமைந்திருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக அமைந்திருந்தது.