தமிழ் சினிமா ரீவைண்ட்: கே.வி. ஆனந்த் இயக்கிய அற்புதமான ரெமாண்டிக் த்ரில்லர்.. மே 13 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
மே 13ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நாளில்தான் இசையமைப்பாளராக இருந்த ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமான படம் வெளியாகியுள்ளது. இந்த நாளில் வெளியாகி வரவேற்பை பெற்ற படங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

கே.வி. ஆனந்த் இயக்கிய அற்புதமான ரெமாண்டிக் த்ரில்லர்.. மே 13 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
மே 13, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் விசு இயக்கி நடித்த வா மகளே வா, கே.வி. ஆனந்த் இயக்குநராக அறிமுகமான கனா கண்டேன், இசையமைப்பாளராக இருந்த ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான பென்சில் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
வா மகளே வா
விசு இயக்கி நடித்து குஷ்பு, ரேகா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க த்ரில்லர் பாணியில் உருவாகி 1994இல் ரிலீசான படம் வா மகளே வா. காரைக்குடி சொர்ணவேல் எழுதிய மெளனம் கலைகிறது என்ற பிரபல நாடகத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருந்த இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.