2024 Tamil Movies: 1000 கோடி லாஸ்.. 223 படம் பிளாப்.. சோகத்தில் தமிழ் சினிமா! மீண்டு வருமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  2024 Tamil Movies: 1000 கோடி லாஸ்.. 223 படம் பிளாப்.. சோகத்தில் தமிழ் சினிமா! மீண்டு வருமா?

2024 Tamil Movies: 1000 கோடி லாஸ்.. 223 படம் பிளாப்.. சோகத்தில் தமிழ் சினிமா! மீண்டு வருமா?

Malavica Natarajan HT Tamil
Jan 30, 2025 11:35 AM IST

2024 Tamil Movies: தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் 223 படங்கள் தோல்வியை சந்தித்ததாகவும், இதனால் தயாரிப்பாளர்களுக்கு 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2024 Tamil Movies: 1000 கோடி லாஸ்.. 223 படம் பிளாப்.. சோகத்தில் தமிழ் சினிமா! மீண்டு வருமா?
2024 Tamil Movies: 1000 கோடி லாஸ்.. 223 படம் பிளாப்.. சோகத்தில் தமிழ் சினிமா! மீண்டு வருமா?

ஏமாற்றமான ஆண்டு

தமிழ் சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டு அமரன், மகாராஜா, கருடன் போன்ற பல படங்கள் வெற்றி பெற்றாலும், 2024 ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகவும் ஏமாற்றமான ஆண்டாக அமைந்ததாக சொல்லப் படுகிறது.

செய்திகள் படி, 2024-ல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ரூ. 3000 கோடியை படங்களில் முதலீடு செய்து செலவிட்டனர், ஆனால் இறுதியில் அவர்கள் சுமார் ரூ. 1000 கோடி நஷ்டத்தை தான் அடைந்ததாக புள்ளி விவரம் சொல்கிறது.

223 தோல்வி படங்கள்

கடந்த ஆண்டு மட்டும் தமிழில் வெளியான 241 படங்களில் சுமார் 18 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. மீதமுள்ள 223 படங்கள் தோல்வியடைந்தன என அவற்றின் வசூல் நிலவரம் தெரிவிக்கிறது. இதனால், நடப்பு ஆண்டு 2025ல் ஆவது தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஆம்டாக அமைய வேண்டும் என கோலிவுட் வட்டாரத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

பெரிய படங்களின் தோல்வி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ரூ. 1000 கோடி அளவில் நஷ்டம் அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் பெரிய ஹீரோக்களில் படங்கள் மக்களிடம் சோபிக்காதது தான். சூர்யா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்ததுதான்.

சூர்யாவின் கங்குவா படத்தை எடுத்துக் கொண்டால், இது ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இந்தப் படம், ரூ. 1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் ரூ. 106 கோடி மட்டுமே வசூலித்தது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 படம் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது, ஆனால் இந்தப் படம் சுமார் ரூ. 150 கோடி மட்டுமே வசூலித்தது. ரஜினிகாந்தின் வேட்டையன் உள்ளிட்ட பல பெரிய படங்களை பார்வையாளர்கள் விமர்சித்து படத்தை புறக்கணித்தனர். இது கோலிவுட்டை ஒரு குழப்பத்தில் ஆழ்த்தியது.

மக்களை ஈர்க்கவில்லை

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஜி. தனஞ்செயன் பேசுகையில், “இந்தியன் 2, கங்குவா, வேட்டையன் போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் மேல் தமிழ் சினிமா அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தது, ஆனால் எதுவும் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை. விஜய்யின் GOAT மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

2023-ல் ஜெயிலர், லியோ, பொன்னியின் செல்வன் 2, வாரிசு, துணிவு போன்ற பல வெற்றிப் படங்கள் இருந்ததைப் போல, 2024-ல் அதிக வெற்றிப் படங்கள் இல்லை. GOAT, அமரன், ராயன், அரண்மனை 4, மகாராஜா உள்ளிட்ட 18 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன.

சின்ன பட்ஜெட் படத்திற்கும் பஞ்சம்

241 படங்களில் 18 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றதால், வெற்றி விகிதம் 7% ஆகக் குறைந்துள்ளது. மீதமுள்ள 93% படங்கள் பெரிய தோல்விகளை சந்தித்தன. சுமார் 150 படங்கள் டிஜிட்டல் பிரிண்ட் மற்றும் விளம்பர செலவுகளைக் கூட ஈடுகட்டவில்லை.” என்றார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவும் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களில் பல வெற்றிகளைக் காண்கிறது, ஆனால் 2024 ஆம் ஆண்டில், அந்த பிரிவிலும் வெற்றிகளுக்கு பஞ்சம் இருந்தது. கருடன், லப்பர் பந்து, டிமாண்டி காலனி 2, வாழை போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை தந்தன. தமிழ் பார்வையாளர்கள் இனி பெரிய பெரிய நட்சத்திரங்கள் பின்னால் செல்வார்கள் எனத் தெரியவில்லை. இப்போது வெளியாகும் படங்கள் கதையின் தாக்கத்தால் தான் வெற்றி பெருகின்றன.

கதைக்கு முக்கியத்துவம்

சிறந்த கதைகள் மற்றும் நடிப்புடன் சிறந்த ஸ்கிரிப்ட்களைக் கோருகிறார்கள். இது 2025 ஜனவரியில் மீண்டும் நிரூபிக்கப்பட்டது. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண் நடித்த பான்-இந்திய திரைப்படமான கேம் சேஞ்சர் வெளியானதைப் பார்த்தோம். படத்தின் தமிழ் பதிப்பு பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ .10 கோடியை மட்டுமே ஈட்டியது. இதற்கிடையில், இரண்டு சிறிய தமிழ் படங்கள் - மத கஜ ராஜா மற்றும் குடும்பபஸ்தான் இந்த மாதம் வெளியாகி பெரிய வெற்றிப் படங்களாக மாறியது. இவை இரண்டும் முறையே ரூ .70 கோடி மற்றும் ரூ .10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. எனவே, நல்ல கதைகளுக்கு இந்த நேரத்தில் தமிழ் ரசிகர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்று தெரிகிறது என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.