தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  21 Years Of Whistle: பேய் கதை, பழிக்கு பழி, விவேக் காமெடி, திருப்புமுனை பிளாஷ்பேக்..! ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விசில்

21 Years of Whistle: பேய் கதை, பழிக்கு பழி, விவேக் காமெடி, திருப்புமுனை பிளாஷ்பேக்..! ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விசில்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 04, 2024 06:40 AM IST

பேய் கதை, பழிக்கு பழி, விவேக்கின் காமெடி மற்றும் திருப்புமுனை பிளாஷ்பேக் என பல்வேறு சர்ப்ரைஸ்கள் கொண்டிரும் படம் விசில். பெரிய நடிகர்கள் இல்லாதபோதிலும் வலுவான திரைக்கதையை கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது

பேய் கதை, பழிக்கு பழி, விவேக் காமெடி, திருப்புமுனை பிளாஷ்பேக் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விசில்
பேய் கதை, பழிக்கு பழி, விவேக் காமெடி, திருப்புமுனை பிளாஷ்பேக் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விசில்

பேய் கதை என்ற போர்வையில் பழிக்குபழியை அதற்கு காரணமாக இருக்கும் பின்னணியையும் கூறும் படம் தான் விசில். டைட்டிலுக்கு ஏற்ப விசிலுக்கு படத்தின் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த படத்தில் நடித்த பெரிய நடிகர்கள் என்றால் விவேக், லிவிங்ஸ்டன், மனோரமா, செந்தில், பானுசந்தர், ஆகியோரை கூறலாம். மற்றபடி பிரதான கதாபாத்திரத்தில் அப்போது புதுமுகங்களாக இருந்த காயத்ரி ரகுராம், ஷெரின், மயூரி, திவ்யதர்ஷினி போன்றோர் நடித்திருப்பார்கள். இயக்குநர் ராஜ்கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஹிந்த விளம்பரங்களில் தோன்றிய விக்ரமாதித்யா படத்தின் ஹீரோவாக நடித்திருப்பார்.

விளம்பர பட இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி உல்லாசம், பாண்டவாஸ் படங்களுக்கு பிறகு இந்த படத்தை இயக்கினார்கள். அர்பன் லெஜெண்ட் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி விசில் படம் உருவாக்கப்பட்டது.

தமிழில் ஸ்லாஸ்ஷர் கதை

ஹாலிவுட் ஸ்லாஸ்ஷர் படங்கள் என்ற ஜானர் ஒன்று உண்டு. பேய், திகில் படங்களின் துணை வகையறாக்களாக இருக்கும் இந்த ஸ்லாஸ்ஷர் படங்களில் ஒருவர் அல்லது ஒரு குழு இன்னொரு குழுவை கொலை செய்வதாகும். அந்த வகையில் விசில் படத்தின் கதையும் அதே பாணியில் தான் அமைந்திருக்கும்.

ட்ரெண்டிங் செய்திகள்

கல்லூரி வளாகம் என்றாலே காதல், நட்பு, ஜாலி கொண்டாட்டம் என காட்டி வந்த தமிழ் சினிமாவில், மேற் கூறிய அனைத்து விஷயங்களுடனும் கல்லூரியில் பேய் நடமாட்டம் என்ற திகில் பின்னணியுடன் வெளியாகி இருந்தது இந்த படம்.

பொதுவாக பேய் படம் என்றாலே படபடப்பை ஏற்படுத்தும் விதமாக ஒளி மற்றும் ஒலியை பயன்படுத்தி, அதற்கென உருவமும் பின்னணி கதையும் கொடுத்திருப்பார்கள். ஆனால் இந்த படத்தின் பேய் பற்றிய பின்னணி கதையை மட்டுமே கூறி ஆர்வதையும், அச்சத்தையும் வரவழைத்து இருப்பார்கள்.

கல்லூரி ஒன்றின் பழைய கட்டட பகுதியில் பேய் இருப்பதாகவும், அதற்கு பின்னணியில் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. பின்னர் வரிசையாக கொலைகள் நடக்க பேய் தான் இதை செய்கிறது என நம்பும் நேரத்தில், பிளாஷ்பேக்காக வரும் கிளைக்கதை திருப்பமும், பழிவாங்கலும் இறுதியில் ஓபன் க்ளைமாக்ஸுடனும் படத்தை முடித்திருப்பார்கள்.

திருப்புமுனை பிளாஷ்பேக்

முதல் பாதியில் பேய் என பில்டப் செய்யப்படும் நாகா என்ற கதாபாத்திரத்தின் பிளாஷ் பேக் இடைவேளை காட்சிக்கு முன் காட்டப்படும். பரிதாபத்தை வரவழைக்கும் விதமாக இருக்கும் இந்த கதாபாத்திரத்தை பேயாக மாற காரணமாக இருந்த மற்றொரு க்ளைமாக்ஸாக வரும் திவ்யதர்ஷினி தொடர்பான காட்சிகள் திருப்புமுனை தரும் விதமாக இருக்கும். அத்துடன் படத்தின் கதையுடன் பொருந்தி போகும் விதமாகவே இருக்கும்.

விவேக் காமெடி

பெண்களில் குரல் மனதில் கேட்கும் விவேக் காமெடி இந்த படத்தில் தான் இடம்பிடித்திருக்கும். நிஜத்தில் ஹாலிவுட் நடிகர் மெல் கிப்சன் வாட் உமன் வாண்ட் என்ற காமெடியை அடிப்படையாக கொண்டு விவேக்கின் இந்த காமெடிகளை அமைந்திருக்கும். இன்று வரையிலும் மிகவும் ரசிக்ககூடிய காமெடியாக இது அமைந்துள்ளது.

பாடல்கள் ஹிட்

டி. இமான் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. அழகிய அசுரா என்ற பாடல் அப்போது அனைத்து எஃப்எம்களிலும் அடிக்கடி ஒலித்த பாடலாக இருந்தது. அதேபோல் நட்பே நட்பே என்ற பாடலை சிம்பு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் குழுவினர்களுடன் இணைந்து பாடியிருப்பார்கள்.

திகில், த்ரில்லர், சஸ்பென்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த படமாக உருவாகியிருந்த விசில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை குவித்தது. திகில் கலந்த சஸ்பென்ஸ் படமாக இருக்கும் விசில் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.