தேசிய விருதை மறுத்தவர்!எம்ஜிஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை!கவிஞர் வாலி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
“கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” இந்த வரிகளை கேட்டால் நாத்திகனுக்கு கூட கண்ணில் நீர் வரும். இந்த வரிகளை எழுதியவர் தான் வாலிப கவிஞர் வாலி.
“கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” இந்த வரிகளை கேட்டால் நாத்திகனுக்கு கூட கண்ணில் நீர் வரும். இந்த வரிகளை எழுதியவர் தான் வாலிப கவிஞர் வாலி. இவருக்கு என தனி அறிமுகம் எதுவும் தேவையில்லை. தமிழ் மக்களின் மனதில் வாழும் ஒரு மாபெரும் இமயம் இவர் ஆவார். கவிஞர் வாலி இந்த உலகை விட்டு மறைந்தாலும், ஒரு போதும் ரசிகர்கள் மனதை விட்டு மறையப்போவாதில்லை. தமிழ் திரை உலகை பல ஜாம்பவன்கள் பல்வேறு காலங்களில் ஆண்டு வந்திருகின்றனர். ஆனால் காலந்தோறும் தமிழ் திரையுலகின் ரசிகர்களை கட்டி ஆளும் திறைமை உள்ளவர்கள் கவிஞர்கள் மட்டுமே. அதில் முக்கியாமனவர் தான் வாலி. அவரைக் குறித்தான சுவாரசிய நிகழ்வுகளை இங்கு காண்போம்.
திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் வாலி பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கராஜன் ஆகும். ஆனால் சிறந்த ஓவியத் திறன் கொண்டிருந்ததால், அவரது நண்பர் பாபு ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என 'வாலி' என்ற பெயரைச் சூட்டினார். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி' என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால், வானொலிக்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு, வாலிக்குக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில், பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா
நிகழ்வுகளை வைத்தே வரிகள்
திரையுலகில் 7,500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி சாதனை படைத்தவர் கவிஞர் வாலி மேலும் எம்ஜிஆர் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை தொடர்ந்து நான்கு தலைமுறை கதாநாயகர்களுக்காக பாடல் எழுதிய பெருமையும் வாலியவே சாரும். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி என அனைவரிடமும் இணக்கமாகவும் பாசத்துடனும் பழகி வந்தவர் கவிஞர் வாலி. வாலிக்கு காவியக்கவிஞர் என்று அடைமொழி கொடுத்து சிறப்பித்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. பாடலில் படத்திற்கான காட்சி அமைப்புகளுக்கு ஏற்றவாறு வரிகள் அமைப்பதை விட அப்போது நடந்துள்ள நிகழ்வுகளை வைத்து வரிகளை எழுதுவதில் வல்லவர் வாலி.
தேசிய விருதை மறுத்தவர்
வாலி 1973 ஆம் ஆண்டு வெளியான பாரத விலாஸ் திரைப்படத்தில் "இந்திய நாடு என் வீடு" என்ற பாடலை எழுதியிருந்தார். அப்பாடலுக்கான தேசிய விருதும் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேசிய விருதை பெறுவதற்காக தங்களது விவரங்களை அனுப்புமாறு ஒன்றிய அரசிடமிருந்து இவருக்கு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை பார்த்த வாலி எனது விவரங்கள் தெரியாமல் எப்படி இவர்களால் எனக்கு விருது கொடுக்க முடியும் என்ற கோபத்தின் உச்சத்தில் அந்த கடிதத்தை கிழித்துப் போட்டார். மேலும் மக்களின் மனதில் நான் நீங்கா இடம் பிடிவாலிய எனக்கு பெரிய விருது எனவும் தெரிவித்தார்.
வாலியின் வரிகள்
கமல் இயக்கத்தில் ஊர்வசி, ரேவதி மற்றும் ரோகிணி ஆகியோர் நடித்து வெளியான படம் மகளிர் மட்டும். இப்படத்தில் நாசருடன் மூவரும் சேர்ந்து பாடும் பாடல் வரிகளை வாலியே எழுதியிருந்தார். அதில் “காளை மாடு ஒன்னு, கறவை மாடு மூணு” என்ற வரிகளை கேட்டு ஊர்வசி மிகவும் கோபம் அடைந்தார் மேலும் எப்படி இவ்வாறு எழுத முடியும் பெண்களை ஏன் இப்படி சித்தரிக்கிறீர்கள் என கேட்டிருந்தார். இதனை கேட்ட வாலி take it easy ஊர்வசி என கூறியிருந்தார். பின்னர் அந்த take it easy ஊர்வசி என்ற வரியை வைத்து இப்போது வரை நம்மால் மறக்க முடியாத ஊர்வசி பாடலை நமக்கு கொடுத்துள்ளார்.
இசையமைப்பாளர்கள் எம் எஸ் விஸ்வநாதன் தொடங்கி இளையராஜா என தொடர்ந்து தற்போது உள்ள அனிருத் வரை பாடல் எழுதிய பெருமை கவிஞர் வாலியவே சாரும் கவிஞர் வாலியின் வரிகள் தத்துவங்களை தருவது மட்டுமல்லாமல் தற்கால இளசுகளின் மனதையும் பறிக்கும் வகையில் இருப்பது கூடுதல் வளம்.
கவிஞர் வாலி சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
நடிகராக வாலி
கவிஞராக காலத்துக்கும் மனதில் நிலைத்திற்கும் வாலி நடிகராகவும் அவரது வாய்ப்பை விட்டு வைக்கவில்லை சத்யா ஹேராம் பார்த்தாலே பரவசம் மற்றும் பொய்க்கால் குதிரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் கையளவு மனசு என்கிற டெலிவிஷன் சீரியலிலும் வாலி நடித்துள்ளார். “நான் இதுவரை 50 வருடங்களாக பாடல் எழுதி சம்பாதிக்காத பெருமையையும் புகழையும் பாலச்சந்தரின் இந்த கையளவு மனசு எனக்கு கொடுத்து விட்டது” எனவும் ஒரு முறை தெரிவித்துள்ளார்.
வாலி மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக 2013 சூன் 7 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, அவர் 2013 சூலை 18 அன்று மாலை 5 மணியளவில் காலமானார். வாலியின் தத்துவ வரிகளோடு, துள்ளல் வரிகளும் நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அவரது பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூர்வோம்.
டாபிக்ஸ்