டைரக்டர் என்ட்ரின்னா இதான்டா.. தமிழ் சினிமாவில் 'ஊர்' பேசும் டைரக்டரின் கதை.. HBD பேரரசு..
தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் இயக்குநர்களில் ஒருவரான பேரரசுவின் பிறந்தநாள் இன்று.

ஒரு சினிமாவைப் பற்றிய பேச்சுகளும், கொண்டாட்டங்களும் வெற்றிகளும் முழுமையைக போய் சேர வேண்டிய இடம் என்றால் அது அப்படத்தின் இயக்குநருக்குத் தான். அவரின் உழைப்பின் வெளிப்பாடு தான் அத்தனை மெனக்கெடலுக்கும் காரணம். அப்படி பலபேரின் மெனக்கெடல்களால் உருவானது தான் தமிழ் சினிமா.
பேரைக் கேட்டாலே அதிரும்
இங்கு ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். ஒரு கொள்கை இருக்கும். கருத்தியல் இருக்கும். அவற்றை எல்லாம் படம் பார்த்த பின்பு தான் நாம் தெரிந்து கொள்வோம். ஆனால், படத்தின் பெயரை சொன்னாலே அதன் இயக்குநர் யார் என்பதை சொல்வதெல்லாம் சிலருக்குத் தான் அமையும். அப்படி தமிழ் சினிமாவில் வரம் பெற்றவர் இயக்குநர் பேரரசு.
தனது முதல் படமான திருப்பாச்சி, அடுத்த படமான சிவகாசியும் மக்களிடம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 2 படங்களும் 100 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடி வசூலைக் கொடுத்தன. இதனால், அடுத்த படத்திற்கு வேறு பெயர் வைத்தாலும் ராசி பார்த்து ஊர் பெயரை வைக்க சொல்லி உள்ளார் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன். இதனை மறுக்க முடியாத பேரரசு, அவரின் ஐடியாவால் தான் தற்போது மக்கள் மத்தியில் ஊரரசாகி நிற்கிறார்.
