தமிழ் சினிமா ரீவைண்ட்: தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படம்.. மே 26 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
மே 26ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படமான புதுப்பேட்டை ரிலீசாகியுள்ளது. இந்த நாளில் மேலும் இரண்டு கிளாசிக் படங்களும் வெளியாகியுள்ளன. ரசிகர்களை கவர்ந்த இந்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

மே 26, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படமான புதுப்பேட்டை, சிவாஜி கணேசனின் சூப்பர் ஹிட் படமான பலே பாண்டியா, கிளாசிக் த்ரில்லர் படமான அதே கண்கள் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
புதுப்பேட்டை
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சிநேகா, சோனியா அகர்வால், அழகம்பெருமாள் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த கேங்ஸ்டர் படமாக உருவாகி 2006இல் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான படம் புதுப்பேட்டை. நல்ல ஓபனிங் கிடைத்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த போதிலும் பாக்ஸ் ஆபிஸில் சராசரி வசூலை பெற்றது. விமர்சக ரீதியாகவும் பாராட்ட பெற்ற இந்த படம் பின்னாளில் தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்றது.
கொக்கி குமார் என்ற கேரிகடரில் தோன்று தனுஷ் ரவுடியாக இருந்து அரசியவாதியாக மாறு வாழ்க்கை பயணத்தை சொல்லும் படமாக இருந்த புதுப்பேட்டை விறுப்பான காட்சிகள், தமிழ் சினிமாவில் இதுவரை பாணியிலான மேக்கிங் மற்றும் திரைக்கதையுடன் உருவாகியிருந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஏராளமான டீட்டெயிலிங்குடன் படத்தின் இயக்குநர் செல்வராகவன் செதுக்கியிருப்பார்.