மதுரை ஸ்லாங்.. வெள்ளந்தி நடிப்பு.. தமிழ் சினிமாவின் எதார்த்த காமெடியன் கஞ்சா கருப்பு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மதுரை ஸ்லாங்.. வெள்ளந்தி நடிப்பு.. தமிழ் சினிமாவின் எதார்த்த காமெடியன் கஞ்சா கருப்பு

மதுரை ஸ்லாங்.. வெள்ளந்தி நடிப்பு.. தமிழ் சினிமாவின் எதார்த்த காமெடியன் கஞ்சா கருப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 05, 2025 06:15 AM IST

ரியலான மதுரை ஸ்லாங்கில் பேசி, வெள்ளந்த நடிப்பாலும், ரியாக்‌ஷன் காமெடிகளால் ரசிக்க வைத்த தமிழ் சினிமாவின் எதார்த்த காமெடியான ஜொலித்து வருகிறார் கஞ்சா கருப்பு

மதுரை ஸ்லாங்.. வெள்ளந்தி நடிப்பு.. தமிழ் சினிமாவின் எதார்த்த காமெடியன் கஞ்சா கருப்பு
மதுரை ஸ்லாங்.. வெள்ளந்தி நடிப்பு.. தமிழ் சினிமாவின் எதார்த்த காமெடியன் கஞ்சா கருப்பு

சினிமா பயணம்

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை தான் கஞ்சா கருப்பின் சொந்த ஊர். என்னும் ஊரில் ஜனவரி 5ஆம் தேதி 1976ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது முழுப்பெயர் கருப்பு ராஜா ஆகும். இயக்குநர் பாலா, ஒரு முறை சிவகங்கை சென்றபோது அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிடும்போது நண்பராகியுள்ளார் கருப்பு.

இதைத்தொடர்ந்து தான் இயக்கிய பிதாமகன் படத்தில், கஞ்சா குடிக்கி என்னும் சிறிய கேரக்டரில் கருப்பை நடிக்க வைத்தார். அப்போது அவரை பெரிதாக கவனிக்கப்படவில்லை. இந்த படத்துக்கு பின்னர் பாலாவிடம் இணை இயக்குநராக இருந்த அமீர் இயக்கிய ராம் படத்தில் கஞ்சா கருப்புவை சோலோ காமெடியனாக பயன்படுத்தினார்.

இந்த படத்தில் வாழவந்தான் என்ற கதாபாத்திரத்தில் காமெடியில் பட்டையை கிளப்பியிருப்பார். சஸ்பென்ஸ் த்ரில்லரான ராம் படத்தில் கஞ்சா கருப்பின் எதார்த்த காமெடி நன்கு ஒர்க் அவுட் ஆகியது. அத்துடன் அவருக்கு சினிமாவிலும் நல்ல பிரேக் கொடுத்தது.

டாப் ஹீரோக்களின் காமெடியன்

இதன் பிறகு விஜய்யுடன் சிவகாசி, அஜித்துடன் திருப்பதி உள்பட தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் காமெடியன் ஆனார். தனக்கென காமெடி ட்ராக் என வைத்துக்கொள்ளாமல் கதையுடன் ஒன்றி அமையும் எதார்த்த காமெடிகளின் மூலம் ரசிக்க வைப்பவராக இருந்தார்.

அதேபோல் கஞ்சா கருப்பு நடித்த சில காமெடி கதாபாத்திரங்கள் பெயர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. பருத்திவீரன் படத்தில் டக்லஸ் என்ற கேரக்டரில் டயலாக் ப்ளஸ் ரியாக்‌ஷன் காமெடி மூலம் அதகளம் செய்திருப்பார். இதேபோல் சுப்பிரமணியபுரம் படத்தில் காசி, தாமிரபரணி படத்தில் முத்து, நாடோடிகள் படத்தில் மாரி, யோகி படத்தில் ஸ்டில்ஸ் மணி என கஞ்சா கருப்புவின் பல ஐகானிக் கேரக்டர்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

சுப்ரமணியபுரம் படத்தில் படம் முழுக்க காமெடியில் கலக்கி வரும் கஞ்சா கருப்பு, க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனாக மாறி டுவிஸ்ட் கொடுத்திருப்பார். ரசிகர்களால் மறக்க முடியாத கதாபாத்திரமாகவும், காமெடி மட்டுமல்லாமல் சீரிஸான வேடத்திலும் நடிப்பில் முத்திரை பதிக்க முடியும் என கஞ்சா கருப்பு நிருபித்த லைஃப் டைம் கேரக்டராகவும் இருந்தது.

சிம்பு தேவன் இயக்கிய அறை எண் 305இல் கடவுள் படத்தில் சந்தானத்துடன் இணைந்து கதையின் நாயகனாகவும் நடித்திருப்பார்.

பிக் பாஸ், சினிமா தயாரிப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ரியாட்டி ஷோ முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற கஞ்சா கருப்பு, 14 நாள் வரை தாக்குபிடித்தார். இவர் வீட்டில் இருந்த ஒவ்வொரு நாளும் கலகலப்புக்கு பஞ்சமில்லாமலே இருந்தது. சுமார் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படம் மூலம் தயாரிப்பாளர் ஆனார். இது அவரது 100வது படமாகும். படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். தமிழ் தவிர மலையாள மொழி சினிமாக்களிலும் நடித்துள்ள கஞ்சா கருப்பு பல படங்களில் சோலோ காமெடியனாகவும் மதுரை ஸ்லாங்கில் எதார்த்த வசனங்கள் பேசி பார்வையாளர்களை சிரிக்க வைத்திருப்பார்.

சொந்த ஊரை சேர்ந்த சங்கீதா என்கிற பிஸியோதெரபிஸ்டை திருமணம் செய்து கொண்ட கஞ்சா கருப்புக்கு மகன் ஒருவர் உள்ளார். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மகிழ்வித்த எதார்த்த காமெடியனாக திகழ்ந்து வரும் கஞ்சா கருப்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.