Actress Sriranjani: 'நேஷனல் லெவல் அத்லெட்ட அம்மா நடிகை ஆக்கிட்டாங்க.. பிட்னஸ் தான் முக்கியம்..'- நடிகை ஸ்ரீரஞ்சனி பேட்டி
Actress Sriranjani: தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகையாக அறியப்படும் ஸ்ரீரஞ்சனி, நடிப்பைத் தவிர தன்னிடம் உள்ள திறமைகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Actress Sriranjani: தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் அம்மா, அக்கா, அல்லது பிற உறவுமுறைகளாக நடிப்போரை நாம் குணச்சித்திர நடிகர்கள் என அடக்கி வைத்து விடுகிறோம். அவர்களுக்கு சில படங்களில் மக்களை ஈர்க்கும் விதமான காட்சிகள் இருக்கும் அல்லது அவை இல்லாமலும் போகலாம். ஆனால், அவர்கள் வரும் ஒருசில சீன்களிலாவது நம் நினைவில் நிற்கும் படி நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.
அப்படி, தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஸ்ரீரஞ்சனி. இவர், தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார். எப்படி சினிமாவிற்குள் வந்தார் என சமீபத்தில் ரெட் நூல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீரஞ்சனி
அந்தப் பேட்டியில், அவர் தான் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த கிருத்துவப் பெண் என்பதை கூறினார். அவரது உண்மையான பெயர் ஸ்ரீரஞ்சனி அல்ல என்றும் இந்து மதத்திற்கு எப்படி மாறினார் என்பது குறித்தும் பேசியுள்ளார்.
பேட்டியில் பேசிய ஸ்ரீரஞ்சனி, நான் பிறப்பில் ஒரு கிருத்துவன். நான் பிறந்தது எல்லாம் மகாராஷ்டிராவில் தான். என் பாட்டி இருந்தது தான் தமிழ்நாடு. என் அப்பா அம்மா, பூனே, கோவா, என அடுத்தடுத்த இடத்திற்கு சென்ற சமயத்தில் தான் நான் என் பாட்டியை பார்க்க தமிழ்நாடு வந்தேன். அவர் என்னை திருப்பி அனுப்ப விரும்பவில்லை. அதனால் நான் அவரோடே தமிழ்நாட்டில் இருந்தேன்.
விளையாட்டுகளில் பங்கேற்பு
இங்கு தான் பள்ளிப்படிப்பு எல்லாம் முடித்தேன். நான் என் பள்ளி நாட்களில் அத்தலெட்டாக இருந்தேன். தமிழ்நாடு அளவில் தேசிய அளவில் எல்லாம் விளையாடி உள்ளேன். தற்போது நான் ஹாக்கியும் விளையாடுவேன். என்னை எப்போதும் பிட்னஸாக வைத்திருப்பது எனக்கு பிடிக்கும்.
நான் பள்ளிகளில் நடைபெறும் நாடகங்களில் எல்லாம் நடித்து பரிசு பெற்றேன். அந்த சமயத்தில் என் வீட்டை சுற்றி சினிமா ஷீட்டிங் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் எனக்கு படங்கள், விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு நடிப்பதில் விருப்பமில்லை என்றாலும் என்னை சுற்றி இருப்பவர்கள் அதை விரும்பியதால் நான் நடிக்க வந்தேன்.
இந்து மதம் மீது ஆற்வம்
நான் பிறப்பில் கிருத்துவனாக இருந்தாலும் எனக்கு இந்து கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. நாங்கள் குடியிருந்த வீட்டின் ஓனர், அதிகம் பூஜை செய்வர்கள். அப்போது, அவர்கள் உடுத்தும் ஆடை, இசை, விழாக்கோலம், என பல என்னை இந்த மதத்தை பற்றி தெரிந்துகொள்ள ஈர்த்தன. அதனால், தான் நான் திருமணத்திற்கு பின் என்னை இந்துவாக மாற்றிக் கொண்டேன். அப்போது, எனக்கு பூஜை செய்வது எல்லாம் பெரிய சங்கடமாக தெரியவில்லை. அதை நான் மிகவும் விரும்புகிறேன் என்றார்.
சினிமாவில் வாய்ப்பு
இவர் முதல் முதலில் கே.பாலச்சந்தரின் காசலவு நேசம் எனும் தொடரில் கஜல் பாடகியாக நடித்தார். பின் இவருக்கு அலைபாயுதே படத்தில் மாதவனுக்கு அண்ணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. இதைத் தொடர்ந்து அவருக்க அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து, தற்போது அவர் சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்