HBD Santhanam: டைமிங் காமெடி மன்னன்! கலாய்ப்பதில் இவருக்கு நிகர் இவர் தான்! நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள்!
HBD Santhanam: சந்தானத்தின் ப்ளஸ் பாயிண்டே எந்த வித மெனக்கேடலும் இல்லாமல் ஒருவரை எளிமையாக கலாய்த்து விட்டு போவது தான். அது ரசிகர்கள் இடத்தில் ரசிக்கும் படியாக இருந்தது. தமிழ் சினிமாவில் கவுண்டமணிக்கு பின் வந்த கலாய் மன்னன் ஆகவே பார்க்கப்பட்டார் சந்தானம்.

மக்களுக்கு பொழுதுபோக்கு என்றாலே ஏதேனும் ஒரு கலை தான் வரும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் நாடகம், நடனம், பாடல் என பலக் கலைகள் இருந்தாலும், எளிய மக்களது பொழுது போக்காக தெருக்கூத்து தான் இருந்து வந்தது. அதிலும் தெருக்கூத்தில் காட்டப்படும் நகைச்சுவை கதாபாத்திரம் மக்களை சிரிக்க வைத்து அவர்களது அலுப்பையும், துன்பத்தையும் மறக்க வைத்தது. இந்தக் கலைகள் தொழில்நுட்ப வளர்ச்சியால் படிப்படியாக வளர்ந்து சினிமா என்ற மாபெரும் துறையாக வளர்ந்தது. சினிமா வளர்ந்த பின்னர பல்வேறு மாற்றங்களும் வர ஆரம்பித்தன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவை என்றால் தனிப்பிரியம் உண்டு. அன்றில் இருந்து இன்று வரை நகைச்சுவை என்றால் மனம் விட்டு கவலைகள் மறந்து சிரித்து மகிழவயது வழக்கமான ஒன்றாகும்.
தங்கபாலு, சந்திரபாபு மற்றும் நாகேஷ் எனத் தொடங்கி கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ் மற்றும் பலர் என வளர்ந்து தற்போது வடிவேலுவை தாண்டி பாலா என பலர் நகைச்சுவை நடிகர்களாக ரசிகர்களை ஆட்கொண்டு வருகின்றனர். இவர்களில் முக்கியமானவராக இருந்தவர் தான் நடிகர் சந்தானம். தனக்கென கலாய் தொனி, டைமிங் கமெண்ட்டுகள் என புகுந்து விளையாடுவார். ஆனால் கடந்து சில ஆண்டுகளாக நகைச்சுவையில் இருந்து விலகி ஹீரோவாக நடித்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர் என்றே கூறலாம். இன்று அவரது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சின்னத்திரை டூ வெள்ளித்திரை
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி தான் இவரது அடையாளம். 90 ஸ் கிட்ஸ் களின் விருப்பமான நிகழ்ச்சியாகவும் இருந்தது. சின்னத்திரையில் ஹீரோக்களை கிண்டல் அடித்து வந்த சந்தானம் காமெடி நடிகராக நடிக்க ஆரம்பித்த பின்னர் நேரடியாக ஹீரோக்களை கலாய்த்து வந்தார் என்றே கூறலாம். 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மன்மதன், சச்சின், இதயத் திருடன் என முன்னணி ஹீரோக்களுடன் கை கோர்க்க தொடங்கினார்.
சந்தானத்தின் ப்ளஸ் பாயிண்டே எந்த வித மெனக்கேடலும் இல்லாமல் ஒருவரை எளிமையாக கலாய்த்து விட்டு போவது தான். அது ரசிகர்கள் இடத்தில் ரசிக்கும் படியாக இருந்தது. தமிழ் சினிமாவில் கவுண்டமணிக்கு பின் வந்த கலாய் மன்னன் ஆகவே பார்க்கப்பட்டார் சந்தானம்.
பார்த்தாவும் இவரே காட்டுப்பூச்சியும் இவரே
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் பார்த்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். தன் நண்பர் ஒருவரை பார்த்து தான் இந்த கதாபாத்திரத்தை பண்ணியதாக ஒரு நேர்காணலில் சொல்லி இருப்பார். அதில் அவரது உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தும் பார்த்தாவாகவவே வாழ்ந்திருப்பார்.
சிறுத்தை படத்தில் வரும் காட்டுப்பூச்சி என்கிற திருடன் பாத்திரம் நிஜ திருடனையும், கார்த்தியிடம் ஏமாறும் திருடனையும் கண் முன் நிறுத்தி இருப்பார். என்றென்றும் புன்னகை, சேட்டை தில்லாலங்கடி,பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் வானம் உட்பட பல படங்கள் இவரது சிறப்பான கவுண்டருக்கு சிறந்த உதாரணம் ஆகும்.
ஹீரோவாக சந்தானம் சாதித்தாரா
கடந்த சில ஆண்டுகளாக சந்தானம் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கமால் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் காமெடியானாக இருந்த போது கிடைத்த வரவேற்பு ஹீரோவாக கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். தில்லுக்கு துட்டு, டிடி ரீட்டர்ன்ஸ் போன்ற படங்கள் மட்டும் அதில் தப்பின. 12 வருடங்களுக்கு முன் வெளியாகமல் போன மதகஜராஜா இப்பொழுது வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சந்தானத்தின் காமெடி தான். இனியாவது ரசிகர்களின் எதிரபாரப்பிற்கு இணங்க ஒரு சில படங்கலாவது காமெடியில் காலக்கினால் சந்தானத்தை யாராலும் குறை சொல்ல முடியாது.

டாபிக்ஸ்