அகில உலக சூப்பர் ஸ்டார் யாரு.. வேறு யாரு இவன் தான பாரு.. மக்களை மகிழ்விக்கும் கலைஞன்.. HBD Shiva
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அகில உலக சூப்பர் ஸ்டார் யாரு.. வேறு யாரு இவன் தான பாரு.. மக்களை மகிழ்விக்கும் கலைஞன்.. Hbd Shiva

அகில உலக சூப்பர் ஸ்டார் யாரு.. வேறு யாரு இவன் தான பாரு.. மக்களை மகிழ்விக்கும் கலைஞன்.. HBD Shiva

Malavica Natarajan HT Tamil
Dec 10, 2024 06:34 AM IST

சினிமா ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிவா இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அகில உலக சூப்பர் ஸ்டார் யாரு.. வேறு யாரு இவன் தான பாரு.. மக்களை மகிழ்விக்கும் கலைஞன்.. HBD Shiva
அகில உலக சூப்பர் ஸ்டார் யாரு.. வேறு யாரு இவன் தான பாரு.. மக்களை மகிழ்விக்கும் கலைஞன்.. HBD Shiva

சொல்லப்போனால் இவர்கள் எல்லாம் திரையில் தோன்றினாலே போதும். மக்களிடமிருந்து ஆர்பரிக்கும் அன்பு வெளிப்படும். அப்படிப்பட்ட அன்புக்கு சொந்தக்காரர் தான் மிர்ச்சி சிவா.

பாசிட்டிவ் ஆட்டிடியூட் 

இவர் வாழ்க்கையில் பலருக்கும் மாபெரும் முன்னுதாரணமாக இருக்கிறவர். காரணம் படிப்பு தனக்கு ஒத்து வரவில்லை என்பதை அறிந்து மாற்று வழியில் சிந்தித்து தனக்கு என்ன வருமோ அதில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும் என நினைப்பவர்.

மனம் முழுக்க பாசிட்டிவ் எண்ணங்கள் மட்டுமே சூழ இருப்பதால், இவர் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். இவரிடம் இருக்கும் பேச்சுத் திறமையை முதன் முதலில் கண்டுபிடித்தது ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டியது ரேடியோ மெர்ச்சி தான்.

கலகல பேச்சுக்காரர்

தன் கலகல பேச்சாலும், கலாய்த்து தள்ளும் குணத்தாலும் அனைவரிடமும் மிக எளிதாக நெருக்கமாகிறார். இது அவருக்கு சினிமா வாய்ப்புகளையும் வழங்கியது.

இவர் 12பி, ஆளவந்தான், விசில் போன்ற படத்தில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தி்ல் நடித்திருந்தாலும், இவரை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது இயக்குநர் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் தான். இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரராகவும் நண்பனின் தங்கையை காதலிக்கும் இளைஞனாகவும் நடித்து அனைவரையும் கவர்ந்து தன் முகத்தை மக்கள் மனதில் பதிய வைத்திருப்பார்.

அடையாளம் தந்த சென்னை 28

இதையடுத்து இவருக்கு கை கொடுத்த படம் தமிழ்படம். இவர் தன் பாணியிலேயே தமிழில் வெளிவந்த பல படங்களை கலாய்த்து தள்ளி இருப்பார். இந்தப் படத்தின் மூலம் தான் இவருக்கு அகில உலக சூப்பர் ஸ்டார் எனும் பட்டமும் கிடைத்தது.

இவரது பேச்சும் நடிப்பும் நடனமும் இவரது ஐககானாக மாறியது. அதுவும் இந்தப் படத்தில் வரும் அர்த்தமில்லாத பாடலுக்கு இவர் அளித்த ரியாக்ஷன்கள் எல்லாம் வேறு லெவலில் இருக்கும்.

மேலும் இவரது சரோஜா, வா கோட்டர் கட்டிங், கலகலப்பு, தில்லுமுல்லு, சொன்னா புரியாது, யாயா, மசாலா படம் போன்ற படங்கள் இவரை காமெடி கதாநாயகனாக நிலை நிறுத்தியது.

வணக்கம் சென்னை திரைப்படமும், கலகலப்பு திரைப்படமும் இவருக்கு சென்னை 28, தமிழ்படம் போல முக்கியத்துவம் அளித்தது.

சூதுகவ்வும் 2

இதையடுத்து இவர் நடித்த சில படங்கள் மக்கள் மத்தியில் ரீச் ஆன நிலையில், தற்போது சூது கவ்வும் திரைப்படத்தின் 2ம் பாகத்தில் நடித்து வந்தார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் மும்மரமாக இருக்கிறார் .

பேச்சால் கவரும் கெட்டிக்காரன்

சினிமா இவருக்கு தொழிலாக இருந்தாலும் இவரது பேச்சு தான் இவரது பலம் என்பதா அறிந்து பல்வேறு சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அங்கு வரும் நடிகர்களிடம் இவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும்.

வேற லெவல்

இவர், சவுதி பாஷா எனும் பாடலை வா கோட்டர் கட்டிங் படத்திற்காகவும், ரோசா ஹே சின்ன ரோசா ஹே எனும் பாடலை சொன்னா புரியாது எனும் படத்திற்காகவும் எழுதியுள்ளார். குறிப்பாக, ரோசா ஹே எனும் பாடலை எழுதியது மட்டும் இல்லாமல் பாடவும் செய்துள்ளார்.

மேலும் ஆடாம ஜெயிச்சோமடா எனும் படத்திற்கு வசனம் எழுதுபவராகவும் இருந்துள்ளார்.

இவரது குரலும், பேசும் விதமும் மக்களை ஈர்க்கும் என்பதால், வண்டி மற்றும் சார்லி சாப்ளின் எனும் படத்தின் கதை சொல்பவராக பணியாற்றினார்.

இப்படி மக்களை சிரிக்க வைக்கும் மனதிற்கு சொந்தக்காரருக்கு இன்று பிறன்தநாள், அவருக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.