Actor Manikandan: யார நம்புறதுன்னே தெரில தாஸ் அண்ணா? இத்தனையும் பொய்யா?- மணிகண்டனின் சம்பவங்கள்..
Actor Manikandan: நடிகர் மணிகன்டன் மிமிக்ரியிலும் கை தேர்ந்தவர் என்பதால் அவர், நாம் நம்ப முடியாத பலருக்கு அவர்களது உண்மையான குரல் போல் டப்பிங் பேசியுள்ளார்.

Actor Manikandan: நடிகர் மணிகண்டன், விஜய் டிவியில் நடந்த ரியாலிட்டி ஷோ மூலம் திரை வெளிச்சத்திற்கு வந்து, பின் மிமிக்ரி, படங்களுக்கு வசனம் எழுதுவது, கதை எழுதுவது, படத்தின் இயக்குநர், டப்பிங் பேசுவது குணச்சித்திர நடிகர், கதாநாயகன் என சினிமாவின் பல பரிமாணங்களில் தன்னை செதுக்கி வைத்துக் கொண்டிருப்பவர் மணிகண்டன்.
திறமையான கலைஞன்
இவர் வசனத்திற்கு விக்ரம் வேதா படமும், நடிப்பிற்கு ஜெய் பீம் படமுமே சாட்சி. இவர், தற்போது குடும்பஸ்தன் எனும் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் டிரெயிலர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை பலரும் அவர்களது சோசியல் மீடியால் ஷேர் செய்தும் வந்தனர். இந்நிலையில், அவர் தான் நடிக்கும் குடும்பஸ்தன் திரைப்படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அந்த வகையில், அவர் குடும்பஸ்தன் படக் குழுவினருடன் மணிகண்டன் கலாட்டா யூடியூப் சேனலின் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
டப்பிங் கிரெடிட்
அப்போது பேசிய மணிகண்டன், "இப்போ வரப் படங்களுக்கு எல்லாம் யாராவது டப்பிங்ல வாய்ஸ் கொடுத்தா அவங்களுக்கு கிரெடிட் கொடுக்குறாங்க. ஆனா முன்ன எல்லாம் அப்படி கிடையாது. நான் எல்லாம் எக்கச்சக்க படத்துக்கு பேசி இருக்கேன். அதெல்லாம் வெளியவே தெரியாது.
பல நேரம் நடிகர்களால டப்பிங் தியேட்டருக்கு வர முடியலன்னா என்ன கூப்பிடுவாங்க. நான் தான் போய் அவங்களுக்கு பதிலா பேசிட்டு வருவேன்.
அமிதாப் பச்சன், விஜய காந்த்க்கு டப்பிங்
இந்தியன் 2 படத்துல விவேக் சாருக்கும் மனோபாலா சாருக்கும் நான் தான் டப்பிங் பேசுனேன். வேட்டையன் படத்துல அமிதாப் பச்சன் சாருக்கு நான் தான் டப்பிங் பேசுனேன். ஏஐ போர்ஷன் புல்லா நான் தான் பேசுனேன். கோட் படத்துல விஜயகாந்த் சார் கெட்டப்க்கு பேசுனேன். இப்போ விடுதலை படத்துல விஜய் சேதுபதி சாருக்காக பேசுனேன். அந்தப் படத்துல நிறைய பேருக்காக பேசியிருக்கேன்.
விஜய் சேதுபதிக்காக நிறைய பேசுவேன்
விஜய் சேதுபதி அண்ணனுக்காக நான் 10 ,12 படம் பேசியிருப்பேன். அது எப்படின்னா சென்சாருக்காக படம் போகும்போது நான் பேசி இருப்பேன். அப்புறம் படத்துல நடுவுல எதாவது டயலாக் பேசனும். இல்ல டப்பிங் சமயத்துல விஜய் சேதுபதி அண்ணன் இல்லைன்னா, படத்துல ஒரு ரெண்டு டயலாக் 3 டலாக் மிஸ் ஆகுதுன்னா அந்த சமயத்துல பேசுறதுன்னு போய் பேசிட்டு வருவேன்.
அவங்களுக்கு தெரியாம பேச முடியாது
இதெல்லாம் அவரோட மேற்பார்வையில தான் நடக்கும். விஜய் சேதுபதி அண்ணனுக்கு தெரியாம நான் போய் பேச முடியாது. அவரு சொன்னா தான் நான் போய் பேசவே முடியும். இல்லென்னா எப்படி. எனக்கு அவரோட வாய்ஸ் வரும்ங்குறதுக்காக எல்லாம் போய் பேசிட முடியாது இல்ல. இப்போ நான் சொன்ன படங்கள் எல்லாம் எனக்கு கிரெடிட் கொடுத்த படங்கள்.
டப்பிங் என் கோட்டை
இப்போ, நான் தான் பேசுனேன்னு கிரெடிட்டே இல்லாம சில படங்கள் இருக்கும் இல்ல. அதெல்லாம் நிறைய இருக்கு. எதாவது ஒரு வாய்ஸ் மிஸ் ஆகுதுன்னா போய் மணிய கூப்டுங்கன்னு டப்பிங் சர்க்கிள்ல இருந்து சொல்லிடுவாங்க. நான் அதை எல்லாம் நல்லா என்ஜாய் பண்ணி தான் பண்றேன். நம்ம வாழ்க்கையே அங்க இருந்து தான ஸ்டார்ட் ஆச்சு. டப்பிங் என்னோட கோட்டை. அங்க ரொம்ப ஜாலியா இருக்கும் " என்றார்.
குடும்பஸ்தன் படம்
இயக்குநர் ராஜேஷ்வர் காளிச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டனுடன் சான்வீ மேக்னா, குரு சோமசுந்தரம் , ஆர் . சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஜித் என். சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைசாக் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படத்தை சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். வினோத்குமார் தயாரித்துள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்