Singer M. S. Subbulakshmi: முதல் பாரத ரத்னா விருது வென்ற இசை கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி
இசை உலகில் பல்வேறு விருதுகளையும், தனக்கென தனித்துவ அடையாளத்தை பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞராக இருப்பவர் எம்எஸ் சுப்புலட்சுமி.

மதுரையில் பிறந்து பின்னர் இசை உலகில் தனக்கென தனியொரு அடையாளத்தை பெற்று உலகப் புகழ் பெற்றவர் மறைந்த கர்நாடக இசை கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி.
இசை குடும்பத்தில் பிறந்த சுப்பலட்சுமி சிறு வயதிலேயே கர்நாடக இசையை முறையாக கற்று தேர்ந்தார். தனது 11 வயதில் முதல் முறையாக மேடை கச்சேரியில் பாடினார். கர்நாடக இசையில் மட்டுமில்லாமல், இந்துஸ்தானி கிளாசிக் இசையும் முறையாக பயினரார்.
கர்நாடக இசை கலைஞராக இருந்த இவர் சென்னைக்கு குடிபெயர்ந்து சினிமாவிலும் நடிகையாக அறிமுகமானார். 1938இல் வெளியான சேவசாதனம் என்ற படத்தில் அறிமுகமான சுப்புலட்சுமி, கடைசியாக 1947இல் வெளியான 1000 தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி படத்தில் நடித்தார்.
இசை உலகில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய சுப்பலட்சுமி பத்மபூஷண், பதமவிபூஷண், சங்கீத கலாநிதி என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
இசைத்துறையில் பாரத ரத்னா விருது வென்ற முதல் இசைக்கலைஞர் என்ற பெருமைக்குரியவராக எம்.எஸ். சுப்புலட்சுமி உள்ளார். இசை உலகில், உலக அளிவில் புகழ் பெற்ற தமிழச்சியாக திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் நினைவு நாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்