Big Boss Tamil 8: நீங்க தலையிடாதீங்க! ரவியிடம் கத்திய தர்ஷிகா! விறு விறுப்பான இறுதி கட்டத்தில் பிக்பாஸ்!
Bigboss Tamil 8: வீட்டின் அனைத்து வயதினரும் விரும்பும் ஒரு நிகழ்ச்சியாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. விஜய் டிவியில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிக் பாஸ் சீசன் 8 தொடங்கி இப்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பல தரப்பு ரசிகர்கள் உள்ளனர். வீட்டின் அனைத்து வயதினரும் விரும்பும் ஒரு நிகழ்ச்சியாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. விஜய் டிவியில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிக் பாஸ் சீசன் 8 தொடங்கி இப்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் சீசன் முடியப்போகிறது. இதன் டைட்டில் வின்னராக யார் வருவார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழும்பியுள்ளது.
ரீ என்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள்
இந்த நிலையில் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் சென்று உள்ளே இருக்கும் போட்டியாளர்களுடன் பேசி வரும் நிகழ்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பழைய போட்டியாளர்கள் வைல்கார்டு என்ட்ரி ஆகிய உள்ளே நுழைந்து அங்கே இருக்கும் மூன்று போட்டியாளர்களுக்கு பதிலாக இறுதிப் போட்டிக்கு செல்வார்கள் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் பல போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இதனால் பிக்பாஸ் வீட்டினுள் களேபரம் நடந்தது எனக கூறலாம். வெளியில் இருந்து உள்ளே சென்றவர்கள் பலரும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் மனதை குழப்பம் வகையிலும் அவர்களது நம்பிக்கையை சிதைக்கும் வகையும் பேசி இருந்தனர்.
பேட்மேன் ரவி அனைவரையும் மூளைச்சலவை செய்வது போல் பேசியதாக தொகுப்பாளர் விஜய் சேதுபதியும் அவரை கண்டித்து இருந்தார். கடந்த பிக் பாஸ் சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் தொடக்கம் முதலே பல விறுவிறுப்பான நிகழ்வுகள், சண்டைகள் சச்சரவுகள் என தொடங்கி தற்போது இது இறுதி வாரத்தை எட்டியுள்ளது.
