எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் மாயா! சந்தர்ப்பவாதி ஆகாதீர்கள்! அர்ச்சனா கண்டனம்! இன்னும் ஓயாத சண்டை!
ஏழாவது சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சனா குறிப்பிட்ட போட்டியாளரின் ரசிகர்களால் அவதூறான பேச்சுகளுக்கு ஆளாவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த சீசனின் சக போட்டியாளரான மாயாவிற்கும் அர்ச்சனாவிற்கும் எக்ஸ் தளத்தில் வார்த்தை சண்டை தொடங்கியுள்ளது.
பல ரசிகர்களின் மனதை கவர்ந்த தமிழ் பிக் பாசின் 8 ஆவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி இன்று வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் கடந்த ஏழு சீசனங்களில் இல்லாத அளவிற்கு பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டன. புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கினார். மேலும் ஆண், பெண்என இரு அணிகள் பிரிக்கப்பட்டன. பிக் பாஸ் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. சண்டைகளும் சச்சரவுகளும் தினந்தோறும் அதிகரித்து வந்தன. மேலும் கடந்த சீசன்களை போல் அல்லாமல் இந்த சீசனில் எந்த ஒரு குறிப்பிட்ட போட்டியாளரும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கடந்த ஏழாவது சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சனா குறிப்பிட்ட போட்டியாளரின் ரசிகர்களால் அவதூறான பேச்சுகளுக்கு ஆளாவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த சீசனின் சக போட்டியாளரான மாயாவிற்கும் அர்ச்சனாவிற்கும் எக்ஸ் தளத்தில் வார்த்தை சண்டை தொடங்கியுள்ளது.
அர்ச்சனாவிற்கு மிரட்டல்
கடந்த பிக் பாஸ் ஏழாவது சீசனை வைல்ட் கார்ட் போட்டியாளராக அர்ச்சனா கலந்து கொண்டார். மேலும் இதனை அடுத்து அங்கிருந்த முந்தைய போட்டியாளர்களுக்கும் இவருக்கும் அதிக சண்டை ஏற்பட்டது. மேலும் முந்தைய போட்டியாளர்கள் ஒரு குறிப்பிட்ட அணியாக சேர்ந்து அர்ச்சனாவை மொத்தமாக புரோவக் செய்து வந்தனர். இதனை எல்லாம் அசால்ட்டாக ஹேண்டில் செய்த அர்ச்சனா இறுதியாக டைட்டில் வின்னர் ஆகவும் மாறினார். தமிழ் பிக் பாஸ் சீசன் களில் முதன்முதலாக வைல்ட் கால்டு என்ட்ரி ஆக வந்த போட்டியாளர் டைட்டில் வின்னராக மாறுவது அதுவே முதல் முறையாகும்.
இருப்பினும் இவரது புரோமோ டீமின் ப்ரோமோஷன் காரணமாகவே இவருக்கு அதிக ஓட்டு விழுந்ததாகவும் இதன் காரணமாக இவர் இவர் டைட்டில் வின்னராகியதாகவும் பரவலாக பேசப்பட்டது. மேலும் மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு இவரது பிஆர் டிமிலிருந்து பல பாலியல் மிரட்டல்களும் கொலை மிரட்டல்களும் சமூக வலைத்தளங்களில் கொடுக்கப்பட்டன எனவும் பேசப்பட்டு வந்தது. இருப்பினும் பல பேட்டிகளில் இது குறித்து விளக்கம் அளித்த அர்ச்சனா பி ஆர் டீம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு எனக்கு வசதி இல்லை எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அர்ச்சனா காதலிக்கும் நபரான அருண் இந்த சீசனில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு ஆதரவாக பல எக்ஸ் தள பதிவுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் அர்ச்சனா. இந்த நிலையில் இந்த சீசனில் உள்ளே இருக்கும் போட்டியாளரான முத்துக்குமரனின் ரசிகர்களாக கருதப்படும் சிலர் அர்ச்சனாவிற்கு பாலியல் மிரட்டல்களையும் கொலை மிரட்டல்களையும் அவரது சமூக வலைதளத்தில் இன்பாக்ஸில் தெரிவித்து வருவதாக அர்ச்சனா ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதனை தனது எக்ஸலத்தில் பதிவிட்டு இருந்தார்.
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் மாயா
இந்த பதிவை கண்ட கடந்த சீசன் போட்டியாளரான மாயா, "டியர் அர்ச்சனா ரவிச்சந்திரன்,
என்ன நடந்தது என்பதைப் பற்றி கேட்க வருந்துகிறேன், நீங்கள் புகார் அளித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முந்தைய சீசனைச் சேர்ந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், "ஒருவரின்" PR ஏஜென்சி காரணமாக சமூக ஊடகங்களில் 100 மடங்கு கடுமையான அச்சுறுத்தல்களைப் பெற்றனர்.
"யாரோ" மற்றும் அவர்களின் PR ஸ்டண்ட் காரணமாக எங்கள் குழந்தைகள் கூட வன்முறை, கற்பழிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள், அது இன்னும் நடக்கிறது.
இது மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், அவர்கள் அனைவரும் கோழைகள் என்றும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கூற விரும்புகிறேன். நீங்கள் அதைக் கொண்டு வந்ததால், எனது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். உங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்த அர்ச்சனா, "உங்கள் பதிவைப் பார்த்தேன், நீங்களும் மற்றவர்களும் அனுபவித்தவற்றில் நான் பச்சாதாபம் கொள்ளும்போது, உங்களுக்கு நடக்கும் போது மட்டும் எப்படி தவறு என்று தோன்றுகிறது என்பது சுவாரஸ்யமானது. பதிவுக்காக, கடந்த சீசனில் சில 'ஒருவரின் PR ஸ்டண்ட்' என் குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை.
எங்களில் இருவருக்கும் எளிதான பயணம் இல்லை, ஆனால் ஒரு சந்தர்ப்பவாதியாக இருப்பதை விட, இதை அழைப்பது மற்றும் ஒன்றாக நிற்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும் அல்லவா? "செடி வாடி போச்சு நா சொல்லு" என்ற எண்ணம் மட்டுமே உள்ளது, எனத் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் கடந்த சீசனில் அர்ச்சனாவின் பிஆர் டீம் தான் தங்களுக்கு கொலை மிரட்டல் விட்டதாக மாயா மறைமுகமாக கூறுகிறார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
டாபிக்ஸ்