களைகட்டும் பிக்பாஸ்! அமர்க்களமாக ஆறு புதிய போட்டியாளர்கள்! இனி தான் ஆட்டம் இருக்கு!
நிகழ்ச்சியின் சுவாரசியமும், விறுவிறுப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் நான்காவது வாரமான நேற்று எந்த போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படவில்லை.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் சுவாரசியமும், விறுவிறுப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் நான்காவது வாரமான நேற்று எந்த போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படவில்லை. மேலும் நேற்று (03/11/2024)புதிதாக ஆறு போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே நுழைந்துள்ளனர். புது போட்டியாளர்களின் வருகையால் பிக் பாஸ் வீடு சற்று சுவாரஸ்யம் அதிகரிக்க தொடங்கியது. ஏனெனில் புதிதாக நுழைந்தவர்கள் இதற்கு முந்தைய எபிசோடுகளை பார்த்து போட்டியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை மேலும் சிறப்பாக நடக்க உதவி புரிவதால் பழைய போட்டியாளர்கள் தங்களை நிரூபித்துக் கொள்ள போட்டியிடுகின்றனர்.
மேலும் புதிதாக வந்த போட்டியாளர்கள் பழைய போட்டியாளர்களின் மத்தியில் தனியாக தெரிய வேண்டும் எனவும் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். இனிவரும் நாட்கள் பிக் பாஸ் சீசன் 18 அதிக சுவாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய போட்டியாளர்கள்
சில தினங்களுக்கு முன்பில் இருந்தே பிக் பாஸ் 8இல் நுழைய போகும் புதிய போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் டி.எஸ்.கேவும் கலந்து கொள்வதாக இருந்தது. இருப்பினும் நேற்றைய எபிசோடில் உள்ளே நுழைந்த புதிய போட்டியாளர்களின் டி.எஸ்.கே இல்லை. மேலும் முன்னதாக வெளிவந்த தகவலின் அடிப்படையில் மஞ்சரி, சிவாஜி தேவ், வெங்கட் ஆகியோர் பிக் பாஸ் வைல்ட் கார்ட் போட்டியளராக உள்ளே நுழைந்துள்ளனர். கூடுதலாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் ராயன் மற்றும் ரியா தியாகராஜன் ராணவ் ஆகியோர் புதிதாக நுழைந்துள்ளனர்.