கோலாகலமாக நடந்த பிக்பாஸ் விக்ரமனின் திருமணம்! பொண்ணு யாரு தெரியுமா?
தமிழ் பிக் பாஸ் சீசன் ஆறில் கலந்துகொண்டு ரன்னர் அப்பா வெற்றி பெற்ற விக்ரமனுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் புகைப்படங்களை விக்ரமன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவரது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
தமிழ் பிக் பாஸ் சீசன் ஆறில் கலந்துகொண்டு ரன்னர் அப்பா வெற்றி பெற்ற விக்ரமனுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் புகைப்படங்களை விக்ரமன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவரது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் இவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் முக்கிய போட்டியாளராக விக்ரமன் கலந்து கொண்டார். அதற்கு முன்னதாக டிவி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் பிக் பாஸில் கலந்து கொண்ட விக்ரமன் பலரால் அதிகமாக விரும்பப்பட்டார். மிகவும் \ நிதானமாகவும், பொறுமையாகவும் பிரச்சனைகளை கையாண்ட விதத்திற்கு பல ரசிகர்கள் உருவாகி இருந்தனர். குறிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர் அசிம் உடன் ஏற்பட்ட மோதலில் மிகவும் கண்ணியமாக, நாகரிகமாக விக்ரமன் பேசியதற்காக பல ரசிகர்கள் கிடைத்தனர். இந்நிலையில் அசிமின் அநாகரிக பேச்சுக்களுக்காக என்றோ எலிமினேட் செய்யப்பட வேண்டியவர் அந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக வந்தார். இது முற்றிலும் அநியாயமானது என விக்ரமின் ரசிகர்கள் தெரிவித்து இருந்தனர்.
சர்ச்சைக்குள்ளான விக்ரமன்
பிக்பாஸில் ரன்னராக வெற்றி பெற்றிருந்தாலும் மக்களின் மனதில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருந்தார். குறிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் "அறம் வெல்லும்" என்ன முழங்கி அனைவராலும் அறியப்படும் ஒரு போட்டியாளராக வலம் வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் விக்ரமின் மீது பல சர்ச்சையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
திடீரென இளம் பெண் ஒருவர் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், தன்னிடம் இருந்து பல ஆயிரக்கணக்கான பணத்தை வாங்கி உள்ளதாகவும், அதை தராமல் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதனால் சமூக வலைதளங்களில் விக்ரமனின் பெயர் பெரிய சர்ச்சைக்கு உள்ளானது இருப்பினும் இந்த சர்ச்சைகளுக்கு இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என விக்ரமன் தெரிவித்திருந்தார் இந்த குற்றச்சாட்டினையும் தாண்டி பல ரசிகர்கள் விக்ரமனக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். விக்ரமனை குற்றம் சாட்டிய இளம்பெண் இதற்கு முன்னதாக சுற்றுச்சூழல் ஆள்வலர் ஆர்வலர் பியூஸ் மானுசை குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
உதவி இயக்குனரை மணந்த விக்ரமன்
இயக்குனர் பார்த்திபனின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பிரீத்தி என்பவரை விக்ரமன் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் திருமணம் புரிந்துள்ளார். இவர்கள் இருவரும் சில காலம் காதலித்து வந்ததாகவும், தற்போது இந்த கல்யாணம் பெரியோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றுள்ளதாகவும் விக்ரமன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திருமணத்தில் பிக் பாஸ் பிரபலங்களான ரட்சிதா மற்றும் சிவின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இயக்குனர் சீனு ராமசாமி, கரு.பழனியப்பன் ஆகியோரும் இந்த கல்யாணத்தில் கலந்து கொண்ட கலந்து கொண்டுள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணத்தின் புகைப்படங்களை விக்ரமன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டாபிக்ஸ்