HBD Kota Srinivasa Rao: 'சாமி' விக்ரமை மிரட்டிய பழம்பெரும் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் பிறந்தநாள் இன்று..!
Kota Srinivasa Rao: தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 700க்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கோட்டா சீனிவாச ராவ். அவரது பிறந்தநாள் இன்று (ஜூலை 10). இந்நாளில் கோட்டா சீனிவாச ராவ் பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ...!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்த கோட்டா சீனிவாச ராவின் தந்தை கோட்டா சீதா ராம ஆஞ்சநேயலு மருத்துவர் ஆவார். ஆரம்பத்தில் தந்தையை போல டாக்டராகும் விருப்பம் இருந்தாலும், நடிப்பின் மீதான ஆசையால் இவர் சினிமா பக்கம் திரும்பினார்.
ஆரம்ப காலகட்டத்தில் கோட்டா சீனிவாச ராவ் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். முக்கியமாக, இவரது கல்லூரி காலங்களில் இவர் நிறைய நாடகங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து 'பிராணம் கீரகிடு' என்ற தெலுங்கு படத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டு சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது வில்லத்தனத்திலும் ஒரு காமெடி கலந்திருக்கும்.
'பெருமாள் பிச்சை'
கோட்டா சீனிவாச ராவ் தமிழில் அறிமுகமானது 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த 'சாமி' தான். ஹரியின் இயக்கத்தில் இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. விக்ரம், த்ரிஷா, விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் கோட்டா சீனிவாச ராவ் வில்லனாக வந்து மிரட்டியிருப்பார். இந்தப்ப டம் கோட்டா சீனிவாச ராவ்வுக்கு புதுப்பாதை அமைத்துக் கொடுத்தது. கோட்டா சீனிவாச ராவ் என்பதை காட்டிலும் 'பெருமாள் பிச்சை' என்ற கேரக்டர் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.