சென்னை பொண்ணு.. அழகான கண்ணக்குழி! ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கும் நடிகை! ஃபேஷன் ஐகானாக ஜொலித்து வரும் ரெஜினா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சென்னை பொண்ணு.. அழகான கண்ணக்குழி! ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கும் நடிகை! ஃபேஷன் ஐகானாக ஜொலித்து வரும் ரெஜினா

சென்னை பொண்ணு.. அழகான கண்ணக்குழி! ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கும் நடிகை! ஃபேஷன் ஐகானாக ஜொலித்து வரும் ரெஜினா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 13, 2024 06:45 AM IST

ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கும் நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த ஃபேஷன் ஐகானகாவும் ஜொலித்து வரும் தமிழ்நாட்டு பெண்ணாக ரெஜினா காசண்ட்ரா இருந்து வருகிறார். இவரது கண்ணக்குழி சிரிப்புக்கு என்ற தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

சென்னை பொண்ணு.. அழகான கண்ணக்குழி! ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கும் நடிகை! ஃபேஷன் ஐகானாக ஜொலித்து வரும் ரெஜினா
சென்னை பொண்ணு.. அழகான கண்ணக்குழி! ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கும் நடிகை! ஃபேஷன் ஐகானாக ஜொலித்து வரும் ரெஜினா

சினிமா பயணம்

சென்னையில் தமிழ் குடும்பத்தில் பிறந்த ரெஜினா, தனது 9வது வயதில் குழந்தைகளுக்கான டிவி சேனலான ஸ்ப்லாஷ் டிவியில் ஆங்கராக செயல்பட்டார். தனது க்யூட்னஸ் பேச்சால் அனைவரையும் கவர்ந்த ரெஜினாகவுக்கு, 14 வயதில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரசன்னா, லைலா நடித்து 2005இல் வெளியான ரொமான்டிக் காமெடி படமான கண்ட நாள் முதல் படத்தில் ஹீரோயின் லைலாவின் தங்கையாக தோன்றி நடிப்பில் கவர்ந்திருப்பார். இதன் பின்னர் அடுத்த ஆண்டிலேயே அழகிய அசுரா என்ற படத்தில் நடித்தார்.

பின்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள உமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி படித்த இவர், நடிப்புக்கு பிரேக் எடுத்துக்கொண்டார்.

நடிப்புக்கு கம்பேக்

மீண்டும் நடிகையாக கம்பேக் கொடுக்க முயற்சித்த ரெஜினாகவுக்கு கன்னடம், தெலுங்கு திரையுலகம் வரவேற்பு அளித்தது. அந்த மொழிகளில் படங்களில் நடித்து விட்டு சிவகார்த்திகேயன் - விமல் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். பக்கத்து வீட்டு பெண் போல் இருந்த இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய இவர் அங்கு வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களின் ஆதர்ச ஜோடியானார். இவர் நடித்த படங்களும் ஹிட்டடிக்க ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். வாரந்தோறும் நகை கடை, துணிகடை திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகையாக உருவெடுத்தார்.

கவர்ச்சி தரிசனம்

ஆரம்பத்தில் ஹோம்லியான வேடங்களில் நடித்த ரெஜினா, தெலுங்கு சினிமாவில் தனக்கு கிடைத்த வரவேற்பால் கவர்ச்சி பொம்மையாக மாறினார். படத்துக்கு படம் கவர்ச்சி தரிசனத்தில் முன்னேற்றம் காட்டி வந்தார்.

2018இல் தமிழுக்கு மீண்டும் வந்த இவர் கெளதம் கார்த்திக் ஜோடியாக மிஸ்டர். சந்திரமெளலி படத்தில் நடித்தார். படம் அட்டர் பிளாப் ஆனபோதிலும் ரெஜினாவின் உச்சக்கட்ட கவர்ச்சி ரசிகர்களை சுண்டி இழுந்தது. தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம், பார்ட்டி ஆகிய படங்களில் நடித்தார். இதில் பார்டி படத்திலும் தாராளம் கட்டிய போதிலும் படம் இன்னும் வெளியாகவில்லை.

செல்வராகவன் இயக்கத்தில் 2021இல் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் இவர் நடித்த மரியம் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாலிவுட் என்ட்ரி

தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த ரெஜினா, 2022இல் வெளியான ராக்கெட் பாய்ஸ் என்ற டிவி சீரிஸ் மூலம் பாலிவுட் சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு கிடைக்க பின்னர் ஷூர்வீர், பார்ஸி, ஜான்பாஸ் ஹிந்துஸ்தான் கே போன்ற இந்தி ஓடிடி தொடர்களில் நடித்தார்.

லேட்டஸ்டாக அஜித்குமாரின் விடாமுயற்சி படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கும் ரெஜினா, ஜாட், செக்சன் 108. பிளாஷ்பேக் போன்ற இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பு போக மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தும் நடிகையாக இருந்து வரும் ரெஜினாக சிறந்த ஃபேஷன் மாடல் பல்வேறு ஃபேஷன் ஷோக்களில் ராம்ப் வாக் சென்றுள்ளார். ஃபேஷன் குயின் என்று அழைக்கும் விதமாக வித்தியாசமான ஆடைகள், மேக்கப்புகள் என பார்ப்பவர்களை கவர்பவராக இருந்துள்ளார்.

தென் இந்திய சர்வதேச திரைப்பட விருது, சைமா விருது, சினிமா விருது போன்ற பல்வேறு விருதுகளை வென்றிருக்கும் நடிகையாக திகழ்ந்து வரும் ரெஜினா, பல்வேறு பிராண்ட்கள் மற்றும் பொருள்களை புரொமோட் செய்யும் செலிபிரட்டியாக இருந்து வருகிறார். ஒரு நடிகையாக சிறந்த நடிப்பையும், திறமையும் வெளிப்படுத்துவதோடு, ரசிகர்கள் விரும்பு கவர்ச்சியை தருவதிலும், ஃபேஷன் மாடலாக சிறந்த ஐகானாக ஜொலித்து வந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்து வரும் ரெஜினா காசண்ட்ரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.