Shruthi Narayanan: ‘உங்க அம்மா, தங்கச்சிக்கும் அதுதானே இருக்கு.. ஆபாச வீடியோ லிங்க் கேட்காதீங்க’ - ஷ்ருதி பதிலடி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shruthi Narayanan: ‘உங்க அம்மா, தங்கச்சிக்கும் அதுதானே இருக்கு.. ஆபாச வீடியோ லிங்க் கேட்காதீங்க’ - ஷ்ருதி பதிலடி

Shruthi Narayanan: ‘உங்க அம்மா, தங்கச்சிக்கும் அதுதானே இருக்கு.. ஆபாச வீடியோ லிங்க் கேட்காதீங்க’ - ஷ்ருதி பதிலடி

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 28, 2025 12:49 PM IST

Shruthi Narayanan: குறிப்பாக, எனக்கு இது மிகவும் கடினமான காலக்கட்டம். இதனை கையாள்வது மிகவும் கஷ்டமான ஒன்றாகும். நானும் ஒரு பெண்தான். எனக்கும் உணர்வுகள் இருக்கின்றன. - ஷ்ருதி நாராயணன்!

Shruthi Narayanan: ‘உங்க அம்மா, தங்கச்சிக்கும் அதுதானே இருக்கு.. ஆபாச வீடியோ லிங்க் கேட்காதீங்க’ - ஷ்ருதி பதிலடி
Shruthi Narayanan: ‘உங்க அம்மா, தங்கச்சிக்கும் அதுதானே இருக்கு.. ஆபாச வீடியோ லிங்க் கேட்காதீங்க’ - ஷ்ருதி பதிலடி

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘என் தொடர்பாக உலாவி வரும் வீடியோவை நீங்கள் தொடர்ந்து பரப்புவது உங்களுக்கு வேண்டுமென்றால், ஜாலியான விஷயமாக இருக்கலாம். ஆனால், எனக்கும் என்னைச்சுற்றி இருப்பவர்களுக்கும் கடினமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதை மறக்காதீர்கள்.

கடினமான காலக்கட்டம்.

குறிப்பாக, எனக்கு இது மிகவும் கடினமான காலக்கட்டம். இதனை கையாள்வது மிகவும் கஷ்டமான ஒன்றாகும். நானும் ஒரு பெண்தான். எனக்கும் உணர்வுகள் இருக்கின்றன. என்னைச்சுற்றி உள்ளவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன.

நீங்கள் சூழ்நிலையை இன்னும் இன்னும் மோசமாக்காதீர்கள். உங்களை மன்றாடிக்கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து வீடியோவை காட்டுத்தீ போல பரப்பாதீர்கள். உங்கள் தாய், சகோதரி, காதலி போன்றோரும் பெண்கள்தான். அவர்களுக்கும் என் போல்தான் உடல் இருக்கிறது. வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பார்த்து என்ஜாய் செய்யுங்கள்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் பதிவிட்ட அவர், ‘ இது ஒரு மனுஷின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.. பொழுது போக்கல்ல.. கமெண்டுகளை பார்க்கும் போது நான் குற்றவாளி போல குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால், ஆணிடம் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். ஏன் இந்த வீடியோவை வெளியிட்டது யார்? இதனை பார்த்தது யார் போன்ற கேள்விகள் ஏன் முன்வைக்கப்படவில்லை. அது வெறும் வீடியோ கிடையாது.

அது ஒருவரின் மனநலம் மற்றும் வாழ்க்கை! நீங்கள் அதில் சிக்கி நிற்கிறீர்கள் என்றால், அது உங்கள் பிரச்சினையாகும். ஆகையால் வீடியோ பரப்பாதீகள்.. லிங்க் கேட்காதீர்கள்’ என்று கூறி இது போன்ற ஆபாச வீடியோக்களை பரப்புதல், மற்றும் ஒளிப்பரப்புதல் உள்ளிட்டவற்றிற்கான தண்டனை சட்டக்குறிப்புகளையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

யார் ஷ்ருதி நாராயணன்?

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் மக்கள் மத்தியில் பிரபலமாகி டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது சிறகடிக்க ஆசை.

மக்களிடம் பிரபலமான ஸ்ருதி நாராயணன்

இதனால், இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் மக்கள் மனதில் பதிவாகிப் போயுள்ளனர். அப்படி இருக்கையில், சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகிகளில் ஒருவரான ரோஹினியின் தோழி வித்யா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ருதி நாராயணனும் மக்களுக்கு மிகவும் பரிட்சையமானவர் தான்.

காரணம் அவர் தான், ரோஹினி செய்யும் அத்தனை தவறுகளுக்கும் உடந்தையாக இருந்து, சில நேரங்களில் அவருக்கு தேவையான அட்வைஸ்களையும் கொடுத்து வருகிறார். இதனால், இவர் மக்களிடம் நல்ல பிரபலமாகி உள்ளார்.