HBD Gautami: இளைஞர்களை மயக்கிய ஹீரோயின்.. 90களில் ஆசை நாயகி.. தென்னிந்தியாவை வலம் வந்த கௌதமி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Gautami: இளைஞர்களை மயக்கிய ஹீரோயின்.. 90களில் ஆசை நாயகி.. தென்னிந்தியாவை வலம் வந்த கௌதமி!

HBD Gautami: இளைஞர்களை மயக்கிய ஹீரோயின்.. 90களில் ஆசை நாயகி.. தென்னிந்தியாவை வலம் வந்த கௌதமி!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 02, 2024 06:30 AM IST

HBD Gautami: 1989, 90 கெளதமி சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருந்தது. இந்த இரண்டு வருடங்களில் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மலையாள படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார். தென்னிந்திய மொழி படங்கள் தவிர இந்தி மொழி படங்களிலும் நடித்தார்.

இளைஞர்களை மயக்கிய ஹீரோயின்.. 90களில் ஆசை நாயகி.. தென்னிந்தியாவை வலம் வந்த கௌதமி!
இளைஞர்களை மயக்கிய ஹீரோயின்.. 90களில் ஆசை நாயகி.. தென்னிந்தியாவை வலம் வந்த கௌதமி!

உறவினர் தயாரித்த படத்தில் நடிகையாக அறிமுகமான இவர், வெங்கடேஷ் நடித்த சீனிவாச கல்யாணம் படம் மூலம் பிரபலமானார். தமிழில் குரு சிஷ்யன் படம் மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழுக்கு முன்பு தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்திருந்த கெளதமிக்கு மூன்று மொழிகளிலும் மாறி மாறி வாய்ப்புகள் வந்தன. முதலில் வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட இவர் டாப் நடிகர்களின் மனம் கவர்ந்த நாயகி ஆனார்.

1989, 90 கெளதமி சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருந்தது. இந்த இரண்டு வருடங்களில் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மலையாள படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார். தென்னிந்திய மொழி படங்கள் தவிர இந்தி மொழி படங்களிலும் நடித்தார்.

தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அப்போது டாப் நடிகர்களாக இருந்த அனைவருடனும் ஜோடியாக நடித்த கெளதமி, தெலுங்கில் வெங்கடேஷ், நாகார்ஜுனா, கன்னடத்தில் அம்ரிஷ், மலையாளத்தில் மோகன்லால் என அனைத்து மொழிகளிலும் டாப் நடிகர்களாக இருந்தவர்களிடம் ஜோடி போட்டுள்ளார்.

தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்த கெளதம் 1998இல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். கெளதமிக்கு மகள் பிறந்த நிலையில் அடுத்த 1999இல் விவாகரத்து பெற்றார். பின்னர் 2004 முதல் 2016 வரை கமல்ஹாசனுடன் லிவிங் டூ கெதரில் இருந்து வந்த கெளதமி, நடிப்புக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு கமலுக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்து வந்தார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் ரீமேக்காக உருவான பாபநாசம் படம் மூலம் 2015இல் மீண்டும் நடிப்புக்கு கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து தனக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர், துப்பறிவாளன் 2 படத்தில் முக்கியத்துவம் மிக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

கடந்த 1997இல் இருந்தே பாஜக உறுப்பினராக இருந்து வரும் கெளதம், அப்போது வாஜ்பாய் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். குழந்தை பிறப்புக்கு பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கிய கெளதமி, பின்னர் 2017இல் மீண்டும் அரசியலுக்கு கம்பேக் கொடுத்தார்.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கெளதமி பின்னர் முறையான சிகிச்சை மூலம் அதிலிருந்து மீண்டார். அதன் பிறகு Life Again Foundation என்ற அறக்கட்டளை தொடங்கி புற்று நோய் குறித்து விழிப்புணர்வும், புற்று நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார்.

பிலிம்பேர் விருது, நந்தி விருது, தமிழ்நாடு அரசின் விருதுகளை வென்றுள்ள கெளதமி 80ஸ் இறுதிகட்டத்திலும் , 1990 தொடக்க காலகட்டத்திலும் டாப் ஹீரோயினால வலம் வந்தார். 90ஸ் கிட்ஸ்கள் ரசித்த முதல் ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வரும் கெளதமி இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.