மன்சூர் அலிகான் மகன் கோரிய ஜாமீன் மனு..எதிர்த்து நின்ற காவல்துறை.. தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி! - பின்னணி இங்கே!
மன்சூர் அலிகான் மகன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்ற தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கிறது. பின்னணியை இங்கே பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் மகனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். சமீப காலமாக இவர் காமெடி கலந்த வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். இவரின் மகன் துக்ளக். இவர் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக போலீசார் அவரை அண்மையில் கைது செய்தனர்.
முழு விபரம்
கடந்த சில நாள்களுக்கு முன்னர் போதை பொருள் பயன்படுத்தியதாக சென்னை திருமங்கலம் போலீசார் 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். அவர்களிடம் ஓபியம், கஞ்சா, போதை மாத்திரைகள் உள்பட பல்வேறு போதை பொருள்கள் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாணவர்களிடம் நடத்திய விசாரணை
இதைத்தொடர்ந்து போலீசார் கைதான மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் , போதை பொருள் முழுவதையும் ரெட்டிட் என்ற செயலி மூலமாக வாங்கியதாகவும், பிறருக்கும் சப்ளை செய்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து இந்த போதை பொருள் விற்பனையில் முக்கிய நபராக கருதப்பட்ட கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவரிடம் நடத்திய விசாரணையில் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடித்த திருமங்கலம் போலீஸ், ஒரு நாள் முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
அப்போது துக்ளக், போதை பொருள் பயன்படுத்தியுள்ளாரா என்பது குறித்து அவரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு உறுதியான நிலையில், துக்ளக் உள்பட 4 பேர் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்ளக் யாரிடமெல்லாம் போதை பொருள்கள் வாங்கினார் என்பதை குறித்து விசாரித்தனர்.
கைதான அனைவரும் அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அனைவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு இன்றைய தினம் சென்னை போதைபொருள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது துக்ளக் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. காவல்துறையின் வாதத்தை ஏற்று நீதிபதி கோவிந்தராஜன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்