காட்டிக்கொடுத்த மொபைல் டேட்டா.. நடிகர் கிருஷ்ணா அதிரடி கைது! - சிக்கியது எப்படி தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காட்டிக்கொடுத்த மொபைல் டேட்டா.. நடிகர் கிருஷ்ணா அதிரடி கைது! - சிக்கியது எப்படி தெரியுமா?

காட்டிக்கொடுத்த மொபைல் டேட்டா.. நடிகர் கிருஷ்ணா அதிரடி கைது! - சிக்கியது எப்படி தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 26, 2025 04:02 PM IST

அவருக்கு மருத்துவசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிருஷ்ணா தனக்கு வயிற்றில் அலர்ஜி, வேகமாக இதயம் துடிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் தன்னால் போதைப்பொருளை பயன்படுத்த முடியாது என்று கூறி அதற்கான மருத்துவ சான்றிதழ்களையும் சமர்பித்தார்.

காட்டிக்கொடுத்த மொபைல் டேட்டா.. நடிகர் கிருஷ்ணா அதிரடி கைது! - சிக்கியது எப்படி தெரியுமா?
காட்டிக்கொடுத்த மொபைல் டேட்டா.. நடிகர் கிருஷ்ணா அதிரடி கைது! - சிக்கியது எப்படி தெரியுமா?

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் போலீசார் நடிகர் கிருஷ்ணாவை ஆஜராகும் படி சம்மன் அனுப்பினர். அதனடிப்படையில் கிருஷ்ணா நேற்று தன்னுடைய வழக்கறிஞருடன் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜராகினார். அவரிடம் நேற்றிலிருந்து கிட்டத்தட்ட 24 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆதரவாக இருந்த ஆதாரங்கள்

அவருக்கு மருத்துவசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிருஷ்ணா தனக்கு வயிற்றில் அலர்ஜி, வேகமாக இதயம் துடிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் தன்னால் போதைப்பொருளை பயன்படுத்த முடியாது என்று கூறி அதற்கான மருத்துவசான்றிதழ்களையும் சமர்பித்தார்.

சாதகமாகவே வந்தது.

மருத்துவ முடிவும் அவருக்கு சாதகமாகவே வந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்திய போதும் பெரிதாக ஆதாரங்கள் சிக்கவில்லை. இதனையடுத்து போலீசார் தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்களை சேகரிக்கும் பொருட்டு, அவரது செல்போனை ஆராய்ந்தனர். அப்போது அதில் கோர்டு வேர்டு மூலம் கிருஷ்ணா சிலருக்கு பேசி இருந்தார்.

அதற்கான அர்த்தம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதே போல கடந்த 2020ம் ஆண்டு முதல் வாட்ஸ் ஆஃப்பில் அழிக்கப்பட்ட குறும்செய்திகளை மீட்டும், கோர்டு வேர்டு மூலம் கிருஷ்ணாவிடம் பேசிய நபர்களை தொடர்பு கொண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே பெங்களூரில் இருந்து போதைப்பொருள் சப்ளையர் கெவினையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

காட்டிக்கொடுத்த மொபைல் டேட்டா

அந்த விசாரணையில் கிருஷ்ணா கெவினுடன் பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதும், அது போதைப்பொருள் தொடர்பான பணபரிவர்த்தனை என்பதும் தெரியவந்தது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.