கார் முதல் வங்கிகணக்கு வரை..அதிரடி சோதனை நடத்தும் போலீசார்.. - நடிகர் கிருஷ்ணாவின் நிலை என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார் முதல் வங்கிகணக்கு வரை..அதிரடி சோதனை நடத்தும் போலீசார்.. - நடிகர் கிருஷ்ணாவின் நிலை என்ன?

கார் முதல் வங்கிகணக்கு வரை..அதிரடி சோதனை நடத்தும் போலீசார்.. - நடிகர் கிருஷ்ணாவின் நிலை என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 26, 2025 11:06 AM IST

அவரது வீடு, கார் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல, அவர் பயன்படுத்திய மருந்துகள் உட்பட அனைத்தையும் போலீசார் கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கார் முதல் வங்கிகணக்கு வரை..அதிரடி சோதனை நடத்தும் போலீசார்.. - நடிகர் கிருஷ்ணாவின் நிலை என்ன?
கார் முதல் வங்கிகணக்கு வரை..அதிரடி சோதனை நடத்தும் போலீசார்.. - நடிகர் கிருஷ்ணாவின் நிலை என்ன?

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கின்றனர். சென்னை பெசன்ட் நகர் கலாக்ஷேத்ரா காலனியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

போலீசார் சோதனை

அவரது வீடு, கார் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல, அவர் பயன்படுத்திய மருந்துகள் உட்பட அனைத்தையும் போலீசார் கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர்பு இருக்கிறதா?

கூடவே, கிருஷ்ணாவின் சமூக வலைதள கணக்குகள், வங்கி பரிவர்த்தனைகள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் பிரசாத், பிரதீப் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பின்னணி என்ன?

முன்னதாக, போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் ஆயத்தமான போது அவர் கேரளாவில் இருப்பதும், அவரது போன் ஸ்விட்ச் ஆப்பில் இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அவர் திடீரென போலீசில் ஆஜரானார்.

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவருக்கு மருத்துவசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தனக்கு வயிற்றில் அலர்ஜி, வேகமாக இதயம் துடிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் தன்னால் போதை பொருளை பயன்படுத்த முடியாது.

பிரசாத்துக்கும் எனக்கும் நேரடியான தொடா்பு கிடையாது. நானும் நடிகர் ஸ்ரீகாந்தும் நல்ல நண்பர்கள் மட்டுமே. விருந்து நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டுள்ளோம். என்னை பற்றி ஸ்ரீகாந்த் சொன்னது அனைத்தும் தவறான தகவல். போதைப் பொருள் கும்பலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனை முடிவு கிடைத்தவுடன் இந்த விஷயத்தில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.