தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Tamannaah Takes Off Her Shoes On Stage To Light Up Lamp, Impressed Fans Say She Learnt It In South India

தென்இந்தியாவில் கற்றுக்கொண்ட பாடம்! விளக்கு ஏற்றும்முன் காலணிகளை நீக்கிய தமன்னா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 16, 2022 12:11 PM IST

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா விருது மேடையில் டாப்ஸி, அனுராக் காஷ்யப் என பிரபங்களோடு ஒய்யாரமான ஹீல்ஸ் அணிந்து நின்றிருந்த தமன்னா, விளக்கு ஏற்றும் போது அந்த ஹீல்ஸை நீக்கிவிட்டு சென்ற செயல் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும்விதமாக அமைந்து.

விளக்கு ஏற்றும்போது காலணிகளை கழட்டி வைதத தமன்னா
விளக்கு ஏற்றும்போது காலணிகளை கழட்டி வைதத தமன்னா

ட்ரெண்டிங் செய்திகள்

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் நடைபெற்ற மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா விருதுகள் வழங்கும் நிகழ்வுக்கு இந்தியாவிலிருந்து பல்வேறு திரைப்பிரலங்கள் சென்றிருந்தனர். இதையடுத்து இந்த விழாவின் தொடங்க நிகழ்ச்சியின்போது குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. அப்போது விழாவுக்கு வருகை தந்த பிரபலங்கள் ஒவ்வொருவரும் குத்துவிளக்கை ஒவ்வொரு திரியிலும் ஏற்றிவர, அடுத்து தமன்னாவுக்கான வாய்ப்பு வந்தது.

விழாவுக்கு தனது பாணியில் ஸ்டாராப்லெஸ் பச்சை நிற டாப்ஸ், கருப்பு நிற ஸ்கின்ட் ஸ்கர்ட், ஹை ஹீல்ஸ் என முற்றிலும் மாடர்ன் உடையில் வந்திருந்த தமன்னா, யாரும் எதிர்பாராத விதமாக தனது காலணியை கழட்டி வைத்து விட்டு மிகவும் பாவ்யமாக வந்து விளக்கை ஏற்றி விட்டு சென்றார்.

இந்த விடியோவை ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், தமன்னாவின் செயலை கவனித்த நபர் ஒருவர் இது தென்னிந்தியாவின் கலாச்சாரம் என்ற கேட்க, அதற்கு ஆம் என்று ஒரு குரல் ஒலிக்கிறது.

தமன்னாவின் இந்த இனிமையான செயலை கண்ட ரசிகர்களுக்கு அவர் பாரட்டி தள்ளியுள்ளனர். "இதுதான் தெற்கில் அவர் கற்ற பாடம், சின்ன விஷயமாக இருந்தாலும் முக்கியமானது என வெளிக்காட்டியுள்ளார் தமன்னா, கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் வளமான பாராம்பரியத்தை காட்டியுள்ளார்" என பலரும் தமன்னாவின் செய்கைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தமன்னா தற்போது பாலிவுட் இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கும் பாபில் பவுன்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். பெண் பவுன்சர் கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ள பாபில் பவுன்சர் திரைப்படம் செப்டம்பர் 23ஆம் தேதி திரைக்கு வருகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்