தோலில் ஏற்படும் பிரச்னையை மறைக்க மேக்கப்.. அரிய வகை நோய் பாதிப்பில் அவதிப்படும் தமன்னா காதலர் விஜய் வர்மா
தமன்னாவின் காதலரான விஜய் வர்மா அரிய வகை தோல் சார்ந்த நோய் பாதிப்பில் அவதிக்குள்ளாகியுள்ளார். இந்த ஸ்டார் ஜோடிகள் நீண்ட நாள்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டில் திருமண பந்தத்தில் இணையுமா என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்

இந்த ஆண்டின் ஸ்டார் தம்பதிகளாக மாறப்போகும் லிஸ்டில் நடிகை தமன்னா, விஜய் வர்மா ஜோடி இருந்து வருகிறார்கள். கடந்த 2023இல் விஜய் வர்மாவை காதலிப்பதாக நடிகை தமன்னா வெளிப்படுத்தினர். இதன் பிறகு காதல் பறவைகளாக இவர்கள் இருவரும் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். அதேசமயம் பிஸியாக நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
விஜய் வர்மாவுக்கு அரிய வகை நோய்
தமன்னாவின் காதலரான விஜய் வர்மா அரிய வகை தோல் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறாராம். இதுபற்றி அவர வெப்சீரிஸ் ஒன்றின் புரொமோஷனல் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளார். தனது ஏற்பட்டிருக்கும் தோல் சார்ந்த பாதிப்பு குறித்து விஜய் வர்மா கூறியதாவது, " விடிலிகோ என்ற தோல் சார்ந்த பாதிப்பு எனக்கு உள்ளது. இதன் காரணமாக வெண்புள்ளிகளை தோன்றும்.
முதலில் இதை பற்றி அறிந்தவுடன் பயந்து போனேன். குறிப்பாக நான் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தும்போது என்னை மிகுந்த கவலையடைய செய்தது. ஆனால் தற்போது என்னை இந்த பாதிப்பானது தொந்தரவு செய்யவில்லை. இது ஒரு காஸ்மெடிக் சார்ந்த பிரச்னை. அத்துடன் நடிக்கும்போது அதை மறைப்பதற்கு மேக்கப் போட்டுக்கொள்வேன். ஆனால் பொது வாழ்க்கையில் அதை செய்து கொள்வது இல்லை. எனக்கு ஏற்பட்டிருப்பது தொற்று நோய் அல்ல. சினிமாவில் பிஸியான நடிகரான பிறகு இந்த விஷயத்தைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டேன்" என்றார்.
