Tamannaah Bhatia: ‘அதிகாரத்த கையில எடுங்க.. சரி சம சம்பளத்துக்கு எவ்வளவு போராட வேண்டி இருக்கு’ -தமன்னா பேட்டி!
Tamannaah Bhatia: பெண்கள் இந்த விஷயத்தை முடிந்தவரை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதும், இதர விஷயங்களை களைந்து அதிகாரத்தை நோக்கி நகர்வதும் மிக முக்கியமான விஷயமாக கருதுகிறேன்.

Tamannaah Bhatia: ‘அதிகாரத்த கையில எடுங்க.. சரி சம சம்பளத்துக்கு எவ்வளவு போராட வேண்டி இருக்கு’ -தமன்னா பேட்டி! (Instagram)
சினிமாவில் ஒரு பெண்ணாக இருப்பது குறித்தும் பாலிவுட் மற்றும் தென்னிந்தியாவில் தன்னுடைய கெரியரை சமநிலைப்படுத்துவது குறித்தும் நடிகை தமன்னா ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்திற்கு பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் பாலின சமத்துவம் மற்றும் ஊதிய விவகாரத்தில் பெண்களுக்கான சமத்துவம் உள்ளிட்டவை குறித்தும் உரையாடி இருக்கிறார்.
அவர் பேசும் போது, ‘ பாலின சமத்துவம் மற்றும் ஊதிய சமத்துவம் விவகாரம் மாறி வருகிறது; கண்டிப்பாக இன்னும் நன்றாக மாறும். வேலை விவகாரத்தில் சில இடங்களில் இது தொடர்பாக வேலைகள் நடக்கின்றன.