Tamanna Bhatia: ‘மாட்ட கொல்ல வேண்டாம்.. மாட்டு மூத்... விற்று கூட வாழலாம்’ -அதிர வைக்கும் தமன்னா பட ட்ரெய்லர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamanna Bhatia: ‘மாட்ட கொல்ல வேண்டாம்.. மாட்டு மூத்... விற்று கூட வாழலாம்’ -அதிர வைக்கும் தமன்னா பட ட்ரெய்லர்!

Tamanna Bhatia: ‘மாட்ட கொல்ல வேண்டாம்.. மாட்டு மூத்... விற்று கூட வாழலாம்’ -அதிர வைக்கும் தமன்னா பட ட்ரெய்லர்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 08, 2025 08:26 PM IST

Tamanna Bhatia: ‘நாம் நிற்பதற்கு பூமிமாதா தேவை. நாம் வாழ்வதற்கு தேவை பூமிமாதா. இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்று அவசியமில்லை.’

Tamanna Bhatia: ‘மாட்டை கொல்ல வேண்டாம்.. மாட்டு மூத்... விற்று கூட வாழலாம்’ -அதிர வைக்கும் தமன்னா பட ட்ரெய்லர்!
Tamanna Bhatia: ‘மாட்டை கொல்ல வேண்டாம்.. மாட்டு மூத்... விற்று கூட வாழலாம்’ -அதிர வைக்கும் தமன்னா பட ட்ரெய்லர்!

ஓடேலா 2 படத்தில் தமன்னா

தற்போது இவர் ஓடேலா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு இயக்குநர் அசோக் தேஜே இயக்கத்தில் வெளியான ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன் படத்தின் தொடர்ச்சியாக இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாகத்தையும் அசோக் தேஜேவா இயக்கி இருக்கிறார்

ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு 'காந்தாரா' புகழ் அஜனேஷ் லோக்நாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் டீசர் உத்திர பிரதேசத்தின் மகாகும்பமேளாவில் வைத்து வெளியிடப்பட்ட நிலையில், அண்மையில் படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் போஸ்டர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன. இவை மக்கள் மத்தியில் கவனத்தையும் பெற்றன.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் சாமியார் தோற்றத்தில் வரும் தமன்னா ‘ நாம் நிற்பதற்கு பூமிமாதா தேவை. நாம் வாழ்வதற்கு தேவை பூமிமாதா. இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. அதன் சிறுநீரை விற்றுகூட வாழ்க்கையை நடத்தலாம்’ என்று பேசி இருக்கிறார். இந்த வசனங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

அண்மையில் சினிமா துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த தமன்னா நெகிழ்ச்சியான பேசி இருந்தார். அந்தப்பதிவில், ‘"உண்மையில், படைப்பாற்றல் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே புரிந்து கொள்ள 20 ஆண்டுகள் ஆகும். என் விஷயத்தில், இது உண்மைதான், ஏனென்றால், நான் மிகவும் இளம் வயதில் என் கெரியரைத் தொடங்கினேன்.

ஆனால், நான் இப்போதுதான் சரியாகத் தொடங்கியிருக்கிறேன் என்று உண்மையாக உணர்கிறேன். மேலும் ஒவ்வொரு நாளையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றி, பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் பார்க்க சிறப்பான ஒன்றை வழங்கப் போகிறேன்," என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.