தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Oru Nodi Teaser: திகில், சஸ்பென்ஸில் புதிய கோணம்! - அப்படி என்ன ஸ்பெஷல்? - ‘ஒரு நொடி’ டீசர் இங்கே! -

Oru Nodi Teaser: திகில், சஸ்பென்ஸில் புதிய கோணம்! - அப்படி என்ன ஸ்பெஷல்? - ‘ஒரு நொடி’ டீசர் இங்கே! -

Kalyani Pandiyan S HT Tamil
Apr 14, 2024 07:45 AM IST

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘ஒரு நொடி’ படத்தில் ‘தொட்டால் தொடரும்’ பட நாயகனும் ‘அயோத்தி’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் முற்றிலும் புதிய பாத்திரம் ஒன்றில் நாயகனாக நடித்திருக்கிறார்.

ஒரு நொடி டீசர்!
ஒரு நொடி டீசர்!

ட்ரெண்டிங் செய்திகள்

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா அண்மையில் வெளியிட்டார்.

இந்த படத்தின் டீசர் சரிகமா மியூசிக் நிறுவனத்தால் சமீபத்தில் அதனது YouTube வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், தமிழ் திரையுலகில் முதல் முறையாக, இப்படத்தின் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 

இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை, இரண்டு விதங்களில் ஒருசேர கவர முடியும் என்று படக்குழு திட்டமிட்டு இதனை செய்திருக்கிறது.

பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனர் தனஞ்செயன் வழங்கும் படம்:

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன், இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப்படத்தை தயாரித்துள்ளனர்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘ஒரு நொடி’ படத்தில் ‘தொட்டால் தொடரும்’ பட நாயகனும் ‘அயோத்தி’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் முற்றிலும் புதிய பாத்திரம் ஒன்றில் நாயகனாக நடித்திருக்கிறார்.

எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா கூட்டணி

அவருடன் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். 

ஒளிப்பதிவு இயக்குநராக கே.ஜி.ரத்தீஷ் பொறுப்பேற்க, கலை இயக்குனர் பணியை கவனிக்கிறார் எஸ்.ஜே. ராம். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கமும், படத்தொகுப்பாளர் எஸ் குரு சூர்யாவும் படத்துக்கு தங்கள் பங்களிப்பை பலமாக செய்திருக்கிறார்கள்.

திகில் மற்றும் மர்மம் நிறைந்த கதையாம்:

இந்தக் கூட்டணி, 'ஒரு நொடி' படத்தின் மூலம் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை ஒன்றை, புதிய கோணத்தில் சொல்லக் காத்திருக்கிறதாம். ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இடம் பெற்றிருப்பதாகவும் படக்குழு தெரிவித்து இருக்கிறது.

ரிலீஸ் எப்போது தெரியுமா?

'ஒரு நொடி' படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழுமையடைந்து, சென்சார் சான்றிதழ்காக காத்திருக்கிறது. இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டில் பி.வி.ஆர். சினிமாஸ் நிறுவனமும், கோயம்பத்தூரில் திருப்பூர் சுப்ரமணியமும், வெளிநாடுகளில் டென்ட்கொட்டா நிறுவனமும், வெளியிடுகின்றனர். இப்படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிட இருக்கிறார்கள்.

ஒரு நொடி படத்தின் கதை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்