தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  44 Years Of Oru Thalai Ragam: ஒரு தலை காதலின் வலி! காதல் தோல்வி கதைகளின் தொடக்க புள்ளி - டி.ஆருக்கு வாழ்க்கை தந்த படம்

44 Years of Oru Thalai Ragam: ஒரு தலை காதலின் வலி! காதல் தோல்வி கதைகளின் தொடக்க புள்ளி - டி.ஆருக்கு வாழ்க்கை தந்த படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 02, 2024 06:15 AM IST

தமிழ் சினிமாவை நேசிக்கும் திரைக்கலைஞனான டி. ராஜேந்தருக்கு வாழ்க்கை தந்த படமாக ஒரு தலை ராகம் இருந்தது காதல் தோல்வி படத்தை ரசிகர்கள் கொண்டாடும் ட்ரெண்ட்டை இந்த படம் உருவாக்கியது.

ஒரு தலை ராகம் படத்தில் ஷங்கர் - ரூபா
ஒரு தலை ராகம் படத்தில் ஷங்கர் - ரூபா

ட்ரெண்டிங் செய்திகள்

ரவீந்தர், சந்திரசேகர், தியாகு உள்பட பலரும் நடித்திருப்பார்கள். டி.ஆர். ராஜேந்தரும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஒரு கல்லூரி மாணவன், சக மாணவி மீது காதலில் விழுவதும், இறுதியில் அவன் காதல் ஜெயித்ததா இல்லையா என்பது தான் படத்தின் ஒன் லைன்.

ஒரு தலை ராகம் கதை

வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் ராஜா. மிகவும் நல்லவன். சாந்த சொரூபி. இவனுக்கு கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவியான சுபத்ரா மீது காதல் பிறக்கிறது. ராஜாவின் காதல் சுபத்ராவுக்கு புரிந்தாலும், அவள் அதனை தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த வேதனையின் காரணமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.

ஒரு கட்டத்தில் சுபத்ராவுக்கு ராஜாவின் மீது காதல் வந்துவிட, அதை ராஜாவிடம் சொல்ல வரும்போது அதிர்ச்சி காத்திருக்க நெஞ்சை ரணமாக்கும் க்ளைமாக்ஸில் படம் முடிவடையும்.

காதல் படங்கள் சோகமான திரைப்படமாக ஒரு தலை ராகம் முடிந்திருந்தாலும் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்ட படமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக படத்தின் திரைக்கதை, வசனம், மேக்கிங் அந்த காலகட்டத்தில் புதுமையாக இருந்தது. இதன் காரணமாகவே தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டராகவும் இந்த படம் மாறியது.

1980 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. குறிப்பாக டி.ஆர். இசையமைத்திருந்த பாடல்கள் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்ததும், அந்த காலத்து கல்லூரி சூழலை திரையில் அப்படியே பிரதிபலித்தது. இதன் காரணமாகவே 80 வாலிபர்கள் இந்த திரைப்படத்துடன் தங்களை எளிதாக கனெக்ட் செய்து கொண்டார்கள்.

படத்தில் மிக முக்கியமாக ஹீரோவின் உணர்வுகளையும், அவர் நினைக்கும் எண்ணங்களையும் பிரதிபலிபாக வைத்து படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது, இளைஞர்களை கவர மற்றொரு முக்கிய விஷயமாக இருந்தது

பாடல்களால் டேக் ஆஃப் ஆன படம்

இந்த படம் வெளியான ஆரம்ப நாள்களில் பெரிய வரவேற்பு எதுவும் இல்லாமல் இருந்தது. காரணம் புதுமுகங்கள், புதிய இயக்குநர் போன்ற விஷயங்கள் இருந்தது. ஆனால் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க தொடங்க, அப்படியே படமும் பிக் அப் ஆகி மாபெரும் வெற்றியை பெற்றது.

குறிப்பாக கூடையில கருவாடு என்ற பாடல் இன்றளவும் ஒலிக்கப்படும் பாடலாக இருந்து வருகிறது. மூன்றாம் பாலினத்தவரை எள்ளல் செய்யும் பாடலாகவும் இதை பாடு வருகிறார்கள். என் கதை முடியும் நேரமிது, வாசமில்லா மலர் இது போன்ற பாடல்களும் கிளாசிக் வகையறக்களாக இருக்கின்றன,

படத்துக்கு கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என அனைத்தையும் செய்தபோதிலும், இயக்கத்துக்கான கிரெடிட்டை ஈ.எம். இப்ராஹிமிடம் விட்டுக்கொடுத்தார் டி.ராஜேந்தர். அதைப்பற்றி பின்னாளில் உஷா பத்திரிகையில் விரிவாக எழுதியிருந்தார் டி.ஆர்.

தான் விரும்பிய பெண் தன்னை காதலிக்க வில்லையே என்ற கதாநாயகனின் தாழ்வுமனப்பான்மையே படம் முழுக்க விரவிக் கிடந்தது. அக்கால காதல் வகையிறாவில், ஒரு வகையிறாவை பிரித்தெடுத்து அதனை படம் விவரித்து இருந்தாலும், தான் விரும்பிய பெண் கிடைக்கவில்லை என்று தன்னையே துன்புறுத்தி மாய்த்துக்கொண்டான் என்பது சில மாணவர்களை தவறான திசை நோக்கி செல்லவும் வழிவகுத்தது என்றும் சொல்லப்பட்டது.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை

அந்த காலகட்டத்தில் பல திரையரங்குகளில் 365 நாள்கள் வரை ஓடிய இந்த படம் வசூலிலும் பட்டையை கிளப்பியது. டி.ஆருக்கு வாழ்வு தந்த படமாக இருந்த ஒரு தலை ராகம் வெளியாகி இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்