Suzhal 2 OTT: அமேசான் பிரைம் ட்ரெண்டிங்கில் சுழல் 2.. கொண்டாடும் மக்கள்.. ட்விட்டர் விமர்சனம் இதோ..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suzhal 2 Ott: அமேசான் பிரைம் ட்ரெண்டிங்கில் சுழல் 2.. கொண்டாடும் மக்கள்.. ட்விட்டர் விமர்சனம் இதோ..

Suzhal 2 OTT: அமேசான் பிரைம் ட்ரெண்டிங்கில் சுழல் 2.. கொண்டாடும் மக்கள்.. ட்விட்டர் விமர்சனம் இதோ..

Malavica Natarajan HT Tamil
Published Mar 02, 2025 11:07 AM IST

Suzhal 2 OTT: கடந்த மாதம் இறுதியில் வெளியான சுழல் 2 வெப் சீரிஸ், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

Suzhal 2 OTT: அமேசான் பிரைம் ட்ரெண்டிங்கில் இருக்கும் சுழல் 2.. மக்கள் கருத்து என்ன?
Suzhal 2 OTT: அமேசான் பிரைம் ட்ரெண்டிங்கில் இருக்கும் சுழல் 2.. மக்கள் கருத்து என்ன?

சுழல் 2 ரிலீஸ்

இது பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்த நிலையில், இப்போது இவர்ககள் இருவரும் சுழல் தி வோர்டெக்ஸ் வலை தொடரின் 2ம் பாகத்திற்கான கதையை எழுதியுள்ளனர். இதனை பிரம்மா இயக்கி உள்ளார். மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த இந்தத் தொடர் இன்று பிப்ரவரி 28 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், சுழல் 2 தொடர் எப்படி இருக்கிறது என்பதை பார்வையாளர்கள் கூறியதை இங்கு காணலாம்.

ட்ரெண்டிங்கில் நம்பர் 1

"சுழல் சீசன் 2 அமேசான் பிரைம் ஓடிடியில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில் சர்க்கரையும் நந்தினியும் அவர்களுக்கான காதலுக்கு சற்று நேரம் ஒதுக்க முடியுமா?" என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

நல்ல அனுபவம்

மற்றும் ஒருவர், "இறுதியாக!! 8 எபிசோடுகளும் முடிந்தது.. ஒவ்வொரு எபிசோடும் உற்சாகமாக இருக்கிறது, நிறைய திருப்பங்களும் இருந்தன!! இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நீங்களும் அமேசான் பிரைமில் தொடரைப் பாருங்கள்!!" எனக் கூறியுள்ளார்.

விறுவிறுப்பான காட்சிகள்

சுழல் 2வது சீசன் விறுவிறுப்பான காட்சிகளுடன் சிறப்பாக அமைந்துள்ளது என இன்னும் ஒருவர் கூறியுள்ளார்.

சுழல் வெப் தொடரின் 2ம் சீசனின் முடிவு ரொம்ப அழகாக இருந்தது. சீசனின் முடிவு தீயாக இருந்தது. மொத்த சீசனும் கூஸ்பம்ப்ஸாக இறுந்தது. வாவ் எனக் கூறியுள்ளார்.

ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீமிங்

சுழல் சீசன் 2 இன்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்துள்ளது. சமீபத்தில் வெளியான டிரைலர் பார்வையாளர்களை ஈர்த்த நிலையில், இரண்டாம் சீசன் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த சீசன் இன்று பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்துள்ளது. சுழல் 2 தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சுழல் 2

இந்த டிரெயிலர் புதிய கதை, சிக்கலான வழக்கு, மற்றொரு ஒரு கொலையின் பின்னால் இருக்கும் மர்மங்கள் பற்றி பேசுகிறது. சிறையிலிருக்கும் நந்தினியை( ஐஸ்வர்யா ராஜேஷ்) வெளியே கொண்டு வர நினைக்கும் சக்கரை(கதிர்) ஒரு வழக்கறிஞரின் (லால்) உதவியை நாடுகிறான். ஆனால், அந்த வழக்கறிஞர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இந்த சிக்கலான வழக்கை விசாரிக்க கதிர் நியமிக்கப் படுகிறார்.

8 பெண்களின் கதை

கதிரின் விசாரணையில் 8 பெண்களுக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த எட்டு பெண்களுக்கும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாத வேறு வேறு பின்னணி கொண்டவர். சொல்லப் போனால், அவர்கள் அனைவருமே வெவ்வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். இதனால், வழக்கு சூடுபிடிக்க, யார் அந்த வழக்கறிஞர், அவர்களுக்கும் அந்தப் பெண்களுக்கும் என்ன தொடர்பு என்பதை வைத்து இந்தக் கதை தயாராகி உள்ளது.