சூர்யாவுக்கு செய்வினை.. ஏழரை சனி குடும்பத்தை விட்டு விலக யாகம்? பயில்வான் சொல்வது என்ன?
சூர்யா குடும்பத்தை பிடித்து ஆட்டும் ஏழரை சனியை விலக்க யாகம் நடத்த உள்ளனர் என பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரும் படங்கள் சில தொடர்ச்சியான தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அவரது நடிப்பில் 2 வருடங்களுக்கு பின் வெளியான கங்குவா திரைப்படம் பெரும் தோல்வியை மட்டும் அல்லாது பல விமர்சனங்களையும் சந்தித்ததால் அவர்களது குடும்பம் மிகுந்த சோகத்தில் உள்ளது.
சூர்யாவிற்கு ஏழரைச் சனி
இதனால், சூர்யா அவரது மனைவி ஜோதிகாவுடனும், கங்குவா படத்தின் இயக்குநருடனும் கோயில் கோயிலாக சுற்றி வருகிறார். அதுகுறித்து பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கிங் வாய்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் கடந்த 3 ஆண்டுகளில் சூர்யா நடிப்பில் வெளியான எந்தப் படமும் சரியாக போகவில்லை. சூர்யா ஆக்ஷன் ஹீரோவாக நடித்த எதற்கும் துணிந்தவன் படமும், தனது மொத்த உழைப்பையும் வாரி வழங்கி நடித்த கங்குவா திரைப்படமும் வெற்றி பெறவில்லை. இந்த அடிப்படையில் சூர்யாவிற்கு ஏழரை சனி தொடங்கியது தெரிகிறது.
செய்வினையை நீக்க யாகம்
அதுமட்டுமின்றி, சூர்யாவிற்கு சிலர் செய்வினை வைத்துவிட்டார்கள் எனவும் 2 அரசியல் கட்சிகள் சதி செய்கின்றனர் எனவும் கூறி வருகின்றனர். இதை படத்தின் புரொமோட்டர் தனஞ்செயனும் உறுதி படுத்தியுள்ளார்.
இதனை அடிப்படையாக வைத்து சூர்யாவும் ஜோதிகாவும் சண்டியாகம் செய்ய உள்ளனர். அதற்கு முன்னதாக அவர்கள் இருவரும் இணைந்து கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்றனர்.
நம்பிக்கைக்காக கோயிலுக்கு செல்லும் தம்பதி
மூகாம்பிகை கோயில், முந்தைய வாழ்க்கையில் இருந்து பின்தங்கிய நிலையில் இருந்தால், செல்வத்தை எள்லாம் இழந்துவிட்டால், அதை மீண்டும் மீட்டுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்கள் மனதில் உச்சத்தில் இருந்த சூர்யா, அந்த செல்வாக்கை இழந்ததால், அதை மீண்டும் மீட்க வேண்டும் என்பதற்காக வழிபாடு நடத்தினர். எம்ஜிஆரே மூகாம்பிகை கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கவாள் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி சென்ற ஜோதிகா
அதற்கு அடுத்தபடியாக, ஜோதிகா தனியே திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபட்டார். அந்த கோயிலில் இந்து அல்லாதவர்கள் வழிபட அனுமதிக்க மாட்டார்கள். பிறப்பால் இஸ்லாமியரான ஜோதிகா, சூர்யாவை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதால் ஒருவேளை அவரை அனுமதித்திருக்கலாம்.
பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் மீதுள்ள அரசியல் மற்றும் மக்கள் வெறுப்புகள் நீங்க சண்டியாகம் நடத்துகின்றனர். இதன் மூலம் அவர்களை பிடித்திருந்த ஏழரை சனி விலக வேண்டும் எனத் தெரிவித்தார்,
கங்குவா சொதப்பியது ஏன்?
கங்குவா படத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதையை நிகழ்காலத்துடன் இணைக்க முயன்றார், இயக்குநர் சிவா. கங்குவா திரைப்படத்தில் முக்கியமில்லாத கதாபாத்திரங்களின் அறிமுகமும், படத்தின் முதல் 20 நிமிடக் காட்சிகளும் சலிப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசையும் மோசமாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. கதை தேவை இல்லை என்றாலும்; ஐந்து வம்சங்களைப் பற்றி சொல்ல வந்த இயக்குநர் சிவாவின் முயற்சி பார்வையாளர்களைக் குழப்பியது. அதனால் பார்வையாளர்களை இந்தக் கதையில் முழுமையாக ஒன்றவில்லை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்