தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Suriya43 Project May Get Dropped Due To The Misunderstanding Between Sudha Kongara And Suriya

Suriya43: படப்பிடிப்பில் கருத்து மோதல்… கைவிடப்படும் சூர்யா 43? - பிரபல தளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 19, 2024 07:47 PM IST

படத்திற்கு ‘புறநானூறு’ என்று பெயர் வைத்திருப்பதாகவும்,படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதாகவும், படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சூர்யா 43
சூர்யா 43

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும் படத்திற்கு ‘புறநானூறு’ என்று பெயர் வைத்திருப்பதாகவும்,படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதாகவும், படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்தப்படம் தொடர்பாக சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், “புறநானூறு படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இந்தப் படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவது சிறப்பு வாய்ந்தது. இது எங்கள் இதயத்திற்கு நெருக்கமானது.

சிறந்த படைப்பை உங்களுக்கு வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்தப்படம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த தகவலானது வலைப்பேச்சு யூடியூப் தளத்தில் பேசப்பட்டு இருக்கிறது. அதில் படப்பிடிப்பில் சூர்யாவிற்கும், சுதா கொங்கராவிற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் திரைப்படம் கைவிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

முன்னதாக, நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

வில்லனாக அண்மையில் அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்நோக்கி காத்திருந்த சமயத்தில் டீசரானது, மாலை 6 மணிக்கு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இந்த நிலையில் தற்போது கங்குவா படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்