தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suriya Speech: ‘அவங்க மிகப்பெரிய சக்தி.. 5 ஆண் செய்யக்கூடிய வேலைய ஒரு பெண்… ஆனா அங்கீகாரம்?’ -சூர்யா பேச்சு!

Suriya Speech: ‘அவங்க மிகப்பெரிய சக்தி.. 5 ஆண் செய்யக்கூடிய வேலைய ஒரு பெண்… ஆனா அங்கீகாரம்?’ -சூர்யா பேச்சு!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 18, 2024 06:09 PM IST

கிட்டத்தட்ட 15 வருடங்களாக அகரத்தில் இருந்து 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு நாம் பரிசு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் பெரும்பான்மையானோர் பெண்களே. சமுதாயத்தில் அதிகமாக கல்லூரி படிப்பை முடிப்பவர்களும் பெண்களாகவே இருக்கிறார்கள்.

சூர்யா பேச்சு!
சூர்யா பேச்சு!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, “அகரத்தினுடைய கூட்டு முயற்சியால் STEM பற்றிய ஒரு கருத்தரங்கு இன்று நடைபெற்று இருக்கிறது. இதனை நான் மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். 

அகரம் ஆரம்பித்த 15 வருடங்களில் அதன் வழியாக இதுவரை கிட்டத்தட்ட 6000 மாணவர்கள் படித்திருக்கிறார்கள். தற்போதும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் 70% பேர் பெண்கள் ஆவர். 

உலகம் முழுவதுமே இன்ஜினியரிங் மற்றும் புது படைப்புகளை கண்டுபிடித்தல் துறைகளில் பெண்களின் பங்கு மிக குறைவாக இருக்கிறது. அதாவது 30 சதவீதம் அல்லது அதற்கு கீழாக இருக்கிறது. 

STEM  படிப்பை அறிவியல், கணிதம் உள்ளிட்டவற்றிற்குள் மட்டும் அடக்கி விட முடியாது. அது புதிய படைப்புகளை கண்டுபிடித்தல், பிரச்சினைகளை தீர்த்தல், எதிர்த்து போரிடுதல் உள்ளிட்டவற்றை சார்ந்தவையாக இருக்கிறது. 

ஆனால் இவையெல்லாம் இயல்பிலேயே பெண்களுக்கு இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது பெண்கள் ஏன் இந்த துறைக்குள் வர மறுக்கிறார்கள் கேட்டால், எங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு இல்லை என்பது அவர்களிடம் இருந்து வந்த பதிலாக இருந்தது. 

ஆனால் பீர் முதல் wi-fi வரை என எல்லா முக்கியமான கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்தது பெண்கள்தான். என்னை சுற்றி பெண்களின் சக்தி மிக உயர்ந்ததாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அதனால் உங்களால் முடியாதது இந்த உலகில் ஒன்றுமே கிடையாது. 

கிட்டத்தட்ட 15 வருடங்களாக அகரத்தில் இருந்து 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு நாம் பரிசு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் பெரும்பான்மையானோர் பெண்களே. சமுதாயத்தில் அதிகமாக கல்லூரி படிப்பை முடிப்பவர்களும்  பெண்களாகவே இருக்கிறார்கள். 

அப்படி இருக்கும் பொழுது அவர்களது கனவு எங்கே தடைபடுகிறது என்பது குறித்து நாங்கள் யோசித்தோம். அதற்கான பதில் திருமணம், குழந்தை பெறுதல் உள்ளிட்டவையாக இருப்பதாக இந்த சமுதாயம் சொல்கிறது. ஆனால் அந்த காரணம் கண்ணாடி போன்றதே. அதனை பெண்களால் உடைக்க முடியும். 

மக்களுக்கான உண்மையான சேவைகளை பெண்களால் மட்டுமே முழுமையாக செய்ய முடியும் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. இதற்காகத்தான் இந்த STEM பற்றிய ஆலோசனைக் கூட்டம். 

நம் உள் மனதில் நாம் எதுவாக ஆக வேண்டும் என்று ஏங்கித் தவிக்கிறோமோ அதுவாக நாம் மாறுவோம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதற்கு எப்பேர்ப்பட்ட தடைகள் வந்தாலும் அது உடைபடும். 

நீங்கள் ஒரு முறை நான் இதுவாக ஆகப்போகிறேன் என்று முடிவு செய்துவிட்டால், அதை உங்களால் சாதிக்க முடியும். மெட்ராஸில் தான் இந்திரா நூயி பிறந்து வளர்ந்தார். அவர் பெப்சி கம்பெனியில் இணைந்த பின்னர், அந்த கம்பெனியின் வருமானமானது இரண்டு மடங்காக மாறி இருக்கிறது. 

அவர் எழுதிய My life in full என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள். அவர் மீதும் இந்த சமுதாயம் வழக்கமாக திணிக்க கூடிய பிரச்சினைகளை திணித்தது. ஆனால் அவர் அதையெல்லாம் மீறி மேலே வந்திருக்கிறார்.

ஒரு பெண் ஒரு ஆணை விட 50 சதவீதம் அதிகமாக உழைத்தால் தான் அவளுக்கான அங்கீகாரம் கிடைக்கிறது.  ஐந்து ஆண்மகன்கள் இணைந்து செய்யக்கூடிய ஒரு வேலையை, ஒரு பெண் செய்வதை என்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.