தமிழ் சினிமா ரீவைண்ட்: சூர்யா நடித்து டைம்ட்ராவல் கான்செப்டில் வந்த படம்.. மே 6 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
மே 6ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், சரத்குமார், சூர்யா, ரவிமோகன் போன்ற ஹீரோக்களின் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நாளில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈரத்த படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

மே 6, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர் நடித்த பாக்தாத் திருடன், சிவாஜி கணேசன் நடித்த பட்டிக்காடா பட்டணமா, சரத்குமார் நடித்த வேடன், ரவிமோகன் (ஜெயம் ரவி) நடித்த எங்கேயும் காதல், சூர்யா நடித்த 24 உள்ளிட்ட ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
பாக்தாத் திருடன்
டி.பி. சுந்தரம் இயக்கத்தில் எம்ஜிஆர், வைஜெயந்தி மாலா, எம்என் நம்பியார். டிஎஸ் பாலையா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வாள் சாண்டை சாகாச காட்சிகள் நிறைந்த படமாக 1960இல் வெளியானது பாக்தாத் திருடன். 1924இல் ரிலீசான அமெரிக்க படமான தி தீஃப் ஆஃப் பாக்தாத்த ரீமேக்காக இந்த படம் உருவானது. எம்ஜிஆரும், வைஜெயந்தி மாலாவும் இணைந்து நடித்த ஒரே படமாக பாக்தாத் திருடன் இருந்ததுடன், படம் சராசரி ஹிட்டாக அமைந்தது. படத்தின் சில காட்சிகளை எம்ஜிஆர் தான் எடிட்டிங் செய்திருந்தார். எம்ஜிஆர் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது
பட்டிக்காடா பட்டணமா
பி. மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா இணைந்து நடித்த ரொமாண்டிக் காமெடி படமாக 1972இல் வெளியானது. வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த இந்த படம் 175 நாள்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சிவாஜிக்கு கமர்ஷியல் ஹிட் படமாக அமைந்தது. படத்தில் அனைவரது நடிப்பும் வெகுவாக பாராட்டுகளை பெற்றதுடன் சிறந்த படம் தேசிய விருது, சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகை (ஜெயலலிதா) பிலிம்பேர் விருதுகளை வென்றது.
