Tamil Movies Rewind: சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு.. கோலிவுட் இன்டஸ்ட்ரி ஹிட் படம்.. ஏப்ரல் 3 தமிழ் ரிலீஸ் படங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies Rewind: சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு.. கோலிவுட் இன்டஸ்ட்ரி ஹிட் படம்.. ஏப்ரல் 3 தமிழ் ரிலீஸ் படங்கள்

Tamil Movies Rewind: சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு.. கோலிவுட் இன்டஸ்ட்ரி ஹிட் படம்.. ஏப்ரல் 3 தமிழ் ரிலீஸ் படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 03, 2025 05:30 AM IST

2025ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் ஏப்ரல் 3ஆம் தேதி சூர்யாவின் அற்புதமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த மாஸ் படம் வெளியாகியுள்ளது. இந்த நாளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சில படங்களை பற்றி பார்க்கலாம்

சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு.. கோலிவுட் இன்டஸ்ட்ரி ஹிட் படம்.. ஏப்ரல் 3 தமிழ் ரிலீஸ் படங்கள்
சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு.. கோலிவுட் இன்டஸ்ட்ரி ஹிட் படம்.. ஏப்ரல் 3 தமிழ் ரிலீஸ் படங்கள்

அயன் திரைப்படம்

மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு, ஆகாஷ்தீப் சைகல், ஜெகன் உள்பட பலரும் நடித்து ஆக்சன் த்ரில்லர் படமாக 2009இல் வெளியான படம் அயன். தமிழ் சினிமாவில் கடத்தல்காரர்கள், கடத்தலில் ஈடுபடும் குருவிகள் பற்றி முழு நீள படமாக காதல், காமெடி, ஆக்சன் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களும் பொருந்திய படமாக அயன் அமைந்திருந்தது. படம் தொடக்கம் முதல் க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பான காட்சிகளுடன் கூடிய திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். பிரபல எழுத்தாளர் சுபா படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளனர்.

சென்னை தவிர நமிபியா, மலேசியா, தென் ஆப்பரிக்கா போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தமன்னாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். வில்லனாக வரும் ஆகாஷ் தீப் சைகல் ஸ்டைலிஷாக தோன்றியிருப்பார். நடிப்பிலும் பட்டையை கிளப்பியிருப்பார்.

பிரபலமடைந்த வசனங்கள்

சன்டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரயலில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் கபூர் தான் ஆகாஷ்தீப் சைகலுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பார். படத்தின் பல்வேறு காட்சிகளில் அவரது டயலாக டெலிவரி ரசிக்கும்படியாக இருக்கும்.

குறிப்பாக, "ஏய் சாலா", "லட்டுல வைச்சேன்னு நினைச்சாய தாஸ். நட்டுல வச்சேன்" போன்ற வசனங்கள் மிகவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டில் இருக்கும் வசனங்களாக மாறின.

மனதை விட்டு நீங்காத பாடல்கள்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் அனைத்து பாடல்கள் ஹிட்டாகியுடன் தற்போது வரை ரசிக்கப்படும் பாடல்களாக உள்ளன. நெஞ்சே நெஞ்சே என்ற பாடலை நமிபியாவில் இரு்கும் ஸ்கெலிடன் கோஸ்ட் பகுதியில் படமாக்கியிருப்பார்கள். இதில் ஒரு காட்சியில் பாலைவனம், கடற்கரை, சூரிய அஸ்தமனம் என 360 டிகிரியில் ஒரே ஷாட்டாக படமாக்கி கண்களுக்கு விருந்து படைத்திருப்பார்கள்.

மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் வரிகளில் இடம்பிடித்த விழி மூடி யோசித்தால் பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. அதேபோல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும், பள பளக்குற பாடலுக்கு நடனம் அமைத்த தினேஷ் ஆகியோருக்கும் பிலிம்பேர் விருது கிடைத்தது.

இந்த படம் 2009ஆம் ஆண்டில் கோலிவுட் இன்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்தது. படம் அந்த காலகட்டத்தில் ரூ. 80 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. தமிழ் தவிர கேரளா, ஆந்திராவிலும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அங்கும் படம் 100 நாள்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

ரஜினிக்கு பாட்ஷா போல், கமல்ஹாசனுக்கு தேவர் மகன் போல், சூர்யாவுக்கு அயன் படம் அமைந்தது. சூர்யாவின் சினிமா கேரியரில் மிக பெரிய ஹிட்டாக அமைந்த அயன் வெளியாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பிரஷ் ஆக இருப்பதுடன், அனைவராலும் பார்த்து ரசிக்ககூடிய சிறந்த பொழுதுபோக்கு படமாக உள்ளது.

ஏப்ரல் 3ஆம் தேதி ரசிகர்களை கவர்ந்த கிளாசிக் பிளாக் அண்ட் ஓயிட் படமான குமாஸ்தா, சத்ய சோதனை ஆகிய படங்களும் வெளியாகியுள்ளன. 

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.