9 Years Massu Engira Masilamani: சூர்யாவையும் விட்டு வைக்காத பேய் செண்டிமெண்ட்! திகில் கலந்த காமெடி படமாக கலக்கிய மாஸ்
தமிழ் சினிமாவில் சில காலம் டிரெண்ட் ஆக இருந்த பேய் பட சென்டிமெண்ட் சூர்யாவையும் விட்டு வைக்கவில்லை. திகில் கலந்த காமெடி படமாக மாஸ் கலக்கியது.
கோலிவுட்டில் பேய் சீசன் பீக்கில் இருந்தபோது திகில் காமெடி கலந்த ஆக்சன் த்ரில்லர் படமாக வெளியான படம் மாசு என்கிற மாசிலாமணி. வெங்கட் பிரபு - சூர்யா இந்த படத்தில் முதல் முறையாக கூட்டணி வைத்தனர். ஆதவன் படத்துக்கு பின் நயன்தாரா, சூர்யா இணைந்து இந்த படத்தில் நடித்தார்கள்.
வழக்கம் போல் வெங்கட் பிரபு படங்களில் இடம்பெறும் பிரேம்ஜி அமரன் இந்த படத்திலும் தவறாமல் இடம்பிடித்திருந்தார். பார்த்திபன் சமுத்திரக்கனி, பிரணிதா, கருணாஸ், ஸ்ரீமன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.சமுத்திரக்கனி வில்லனாகவும், பார்த்திபன் வில்லங்கம் பிடித்த கேரக்டரில் தங்களது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர்கள்.
ரிலீஸ்க்குமுன் நடந்த ட்விஸ்ட்
முதலில் இந்த படத்துக்கு மாஸ் என்றே தலைப்பு வைத்தார்கள். அத்துடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் சூர்யா வண்ணமயமான கூலர்ஸ் அணிந்து ஸ்டைல் லுக் கில் இருந்தார். இதுவே படம் மீது hype ஏற்றியது. ஆனால் படம் ரிலீஸ்க்கு சில நாள்கள் முன்னர், டைட்டிலை மாற்றி படக்குழு ட்விஸ்ட் கொடுத்தனர். அப்போது இதை வைத்து பல troll களும் செய்யப்பட்டன.
திகிலும், காமெடியும் கலந்த கதை
பணத்துக்காக மோசடி செய்யும் சூர்யா, பிரேம்ஜி விபத்தில் சிக்கி உயிர் போய் பிழைக்கிறார்கள். இதில் பிரேம்ஜி மரணம் அடைந்து சூர்யா கண்ணுக்கு மட்டும் ஆவியாக தெரிகிறார்.
உயிர் போய் தப்பித்த சூர்யாவுக்கு ஆவிகள் கண்ணுக்கு தெரியும் அபூர்வ சக்தி கிடைக்கிறது. இதை வைத்து பணம் சம்பாதித்து வரும் அவருக்கு எதிர்பாரத திருப்பமாக அவரது தந்தை ஆவி மூலம் குடும்ப பின்னணி தெரிய வருகிறது.
பின்னர் குடும்பத்தை கொன்றவர்களை தந்தை ஆவி உதவியுடன் சூர்யா பழி வாங்குவது தான் படத்தின் கதை.
வெங்கட் பிரபு படங்களுக்கே உண்டான காமெடி உடன் முதல் பாதியும், இரண்டாம் பாதி serious ஆகவும் செல்லும் விதமாக படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும்
பாடல்கள் ஹிட்
மதன் கார்க்கி, விவேகா பாடல் வரிகள் எழுத யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. பாடல்களின் காட்சி அமைப்பு நடனம் ரசிக்கும் விதமாக அமைந்து இருந்தன. படத்தின் பின்னணி இசையும் வெகுவாக பேசப்பட்டது.
பாக்ஸ் ஆபிஸ் வரவேற்பு
கோடை விடுமுறை முடிவதற்கு முன் வெளியான இந்த படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. இருப்பினும் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் சராசரி வசூலை பெற்றது. யுவனின் இசை, சூர்யாவின் நடிப்புக்காக பேசப்பட்ட இந்த படம் சிறந்த டைம் பாஸ் படமாக இருக்கிறது. சூர்யாவையும் விட்டு வைக்காத பேய் செண்டிமெண்ட் அவரை பேய் ஆக்கிய மாஸ், அதாவது மாசு என்கிற மாசிலாமணி வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்