ரலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்கள்..கங்குவா படக்குழுவுக்கு அதிர்ச்சி! பிளாட்டில் இறந்த நிலையில் எடிட்டர் - என்ன நடந்தது?
ரிலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் தான் இருக்கும் நிலையில் கங்குவா படத்தொகுப்பாளர் மரணம் அடைந்திருப்பது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளாட்டில் இறந்த நிலையில் எடிட்டர் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் அட்வெண்ச்சர் பேண்டஸி திரைப்படமான கங்குவா நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதையடுத்து படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர்கள் பம்பரமாக சுழன்று ஈடுபட்டு வருகின்றனர்.
கங்குவா படத்தொகுப்பாளர் மரணம்
இந்த நேரத்தில் கங்குவா படத்தின் படத்தொகுப்பாளரான நிஷாத் யூசூஃப் மரணம் அடைந்திருக்கிறார். இவர்தான் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த புதிய படத்துக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார்.
இந்த சூழலில் இவர் திடீரென மரணம் அடைந்திருப்பது கங்குவா படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த படத்தொகுப்பாளரான 43 வயதாகும் நிஷாந்த் யூசுஃப் கொச்சியிலுள்ள பனம்பிள்ளி நகரில் உள்ள தனது பிளாட்டில் அதிகாலை 2 மணிக்கு இறந்த நிலையில் கண்டறியப்பட்டார்.