தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Suriya Starrer Ayan Movie Completed 15 Years Of Its Release

15 Years of Ayan: "லட்டுல வைக்கல தாஸ், நட்டுல வச்சேன்" - ரஜினிக்கு பாட்ஷா போல் சூர்யாவுக்கு பிளாக்பஸ்டராக அமைந்த அயன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 03, 2024 06:00 AM IST

சூர்யாவின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருந்து வரும் அயன் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூலை குவித்தது. தமிழ் சினிமாவில் புதுமையான கதைகளமாக இருந்த இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

அயன் திரைப்படம்
அயன் திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆக்‌ஷனுடன் காதல், காமெடியும் கலந்து உருவாகியிருக்கும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகி அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. ஏவிஎம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் குழந்தைகள், பெரியவர் என அனைத்து வயதினரையும் கவரும் விதமாக அயன் படம் அமைந்திருந்தது.

தமிழ் சினிமாவுக்கு புதுமையான கதைக்களம்

விமானம் மூலம் கடத்தல், கடத்தலில் ஈடுபடும் குருவிகள் என தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான கதை களமாக இந்த படத்தின் கதை அமைந்திருந்தது. வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை மருந்துகள், சட்டவிரோத பொருள்களை கடத்தும் குரூப்களுக்கு இடையே மோதல், அதில் வில்லனனை ஹீரோவான சூர்யா ஜெயிப்பது தான் படத்தில் ஒன் லைன்.

இயக்குநர் கேவி ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா இணைந்து விறுவிறுப்பான காட்சிகளுடன் படத்தின் திரைக்கதை அமைத்திருப்பார்கள்.

படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம், கடத்தலில் ஈடுபடும் பிரபுவின் கேங்கில் இருந்து கடத்திலில் ஈடுபடுவது, ஜெகனுடன் நட்பு, தமன்னாவுடன் காதல், வில்லன் ஆகாஷ்தீப்புடன் மோதல் என பல்வேறு பரிணாமங்களுடம் அமைந்திருக்கும். இந்த படத்தில் சூர்யா 10 விதமான லுக்குகளில் தோன்றியிருப்பார்.

ஒரு பாடலில் தான் நடித்த படங்களின் கதாபாத்திரங்களில் லுக்கில் சர்ப்ரைஸ் அளித்திருப்பார். அத்துடன் பாடல்களில் சூர்யாவின் நடனமும், ஆக்‌ஷன் காட்சியில் அவரது விறுவிறுப்பான நடிப்பும் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தன.

பல்வேறு நாடுகளில் ஷுட்டிங்

சர்வதேச அளவிலான கடத்தில் பற்ற கதைக்களமாக அயன் படம் இருக்கும் நிலையில் தென்ஆப்பரிக்கா, நமிபியா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டன.

படத்தில் ஆப்பரிக்கர்களிடம் இருந்து டைமண்டை காப்பாற்றும் விதமாக இருக்கும் முக்கிய சண்டை காட்சி பக்காவாக ரிகர்சல் செய்து சிங்கிள் லாங் ஷாட்டில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். ரியலாக நடக்கும் சண்டை போன்றே தத்ரூபமாக இருக்கும்.

வில்லன் நடிப்பு அபாரம்

பாலிவுட் நடிகரான ஆகாஷ்தீப் சைகல் தமிழில் முதல் முறையாக இந்த படத்தில் தான் நடித்திருப்பார். அவரது நடிப்பு, பாடி லாங்குவேஜ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சன்டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரயலில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் கபூர் தான் ஆகாஷ்தீப் சைகலுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பார். படத்தின் பல்வேறு காட்சிகளில் அவரது டயலாக டெலிவரி ரசிக்கும்படியாக இருக்கும்.

ஏய் சாலா, லட்டுல் வைச்சேன்னு நினைச்சாய தாஸ். நட்டுல வச்சேன் போன்ற வசனங்கள் மிகவும் பிரபலம் அடைந்தன

பாடல்கள் செம ஹிட்

படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வைரமுத்து, நா. முத்துகுமார், பா. விஜய் பாடல் வரிகள் எழுதியுருப்பார்கள். அனைத்தும் பாடல்களும் செம ஹிட்டானதுடன் இன்று வரையிலும் ரசிக்கும் பாடலாக இருந்து வருகிறது.

நெஞ்சே நெஞ்சே என்ற பாடலை நமிபியாவில் இரு்கும் ஸ்கெலிடன் கோஸ்ட் பகுதியில் படமாக்கியிருப்பார்கள். இதில் ஒரு காட்சியில் பாலைவனம், கடற்கரை, சூரிய அஸ்தமனம் என 360 டிகிரியில் ஒரே ஷாட்டாக படமாக்கி கண்களுக்கு விருந்து படைத்திருப்பார்கள்.

பிளாக்பஸ்டர் ஹிட்

அயன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றது. நடிகர்களின் நடிப்பு, தொழிநுட்பம் கலைஞர்களின் பணிகள் என அனைத்தும் பக்காவாக அமைந்திருந்த அயன் ரூ. 75 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்தது.

ரஜினிக்கு பாட்ஷா போல், கமல்ஹாசனுக்கு தேவர் மகன் போல், சூர்யாவுக்கு அயன் மிக பெரிய ஹிட்டாக அமைந்து அவரது சினிமா கேரியரில் முக்கிய படமாக அமைந்தது.எப்போது பார்த்தாலும் பிரஷாக இருப்பதுடன், பார்த்து ரசிக்ககூடிய சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் அயன் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்