‘இம்முறை அடி ரொம்ப பலமா இருக்கும்.. என்னுடைய அடுத்தப்பட டைரக்டர் இவர்தான்’ - மேடையில் அறிவித்த சூர்யா!
என்னாலேயே இந்த இடத்திற்கு வரும்பொழுது உங்களால் இன்னும் சிறப்பான இடத்திற்கு வர முடியும். நீங்கள் என் மீது காட்டும் அன்பை கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து போகிறேன். - சூர்யா பேச்சு!

‘இம்முறை அடி ரொம்ப பலமா இருக்கும்.. என்னுடைய அடுத்தப்பட டைரக்டர் இவர்தான்’ - மேடையில் அறிவித்த சூர்யா!
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் மே 1 அன்று வெளியாக இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நாசர், ஜோஜூ என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை புரோமோட் செய்ய நேற்று ( 26-04-2025) ஹைதராபாத்திற்கு சென்று இருந்தார்.
வரலாற்றை மாற்றி எழுதலாம்
அங்கு பேசிய அவர், ‘பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இந்த இடத்தில் மரியாதையையும், பிரார்த்தனையையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த சம்பவத்தைக் கேட்டு நான் அப்படியே உடைந்து போய் விட்டேன். பயங்கரவாதம் எந்த வகையில் நடந்தாலும் அது நமக்கு இழப்பை கொண்டு வந்து சேர்க்கும்.