Suriya Sivakumar: கே.வி. ஆனந்த் வீட்டில் விசேஷம்..வறுத்தெடுத்த விமர்சனங்கள்; வாழ்த்து தெரிவிக்க ஓடி வந்த சூர்யா!
இந்த செய்தி திரைத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
நடிகர் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் ‘அயன்’. இந்தப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த்.
அதனைத்தொடர்ந்து இந்த கூட்டணி ‘மாற்றான்’ ‘காப்பான்’ ஆகிய திரைப்படங்களில் ஒன்றாக இணைந்தது. ஆனால் இரு திரைப்படங்களுமே அயன் அளவிற்கு பெரிய வரவேற்பை பெறவில்லை.
இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு கே.வி.ஆனந்த் காலமானார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகவும், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த செய்தி திரைத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கே.வி.ஆனந்தின் மூத்த மகளான சாதானாவிற்கு திருமணம் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தில் சூர்யா கலந்து கொள்ள வில்லை. இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்த நிலையில் தற்போது கே.வி.ஆனந்த் மகளுக்கு நிச்சயம் ஆகி உள்ளது. அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், நடிகர் சூர்யா தன்னுடைய அப்பா சிவகுமாருடன் கே.வி.ஆனந்த் வீட்டிற்கு சென்று ஆனந்த் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்
சிவகுமார் மகாத்மா காந்தியின் ஓவியத்தையும் பரிசாக கொடுத்திருக்கிறார். அத்துடன் கே.வி. குடும்பத்தினர் அனைவரும் சூர்யா சிவகுமாருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர்.
டாபிக்ஸ்