Kanguva Review:‘மெய் சிலிர்க்க வைச் சுட்டாங்க.. சூர்யா நடிப்பு உச்சம்' - கங்குவா முதல் விமர்சனம்!
Kanguva Review: கங்குவா படத்தை பார்த்த பிரபலம் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், படத்தின் விமர்சனத்தை பதிவிட்டு இருக்கிறார்.

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பாபி தியோல் இந்தப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் முதல் விமர்சனத்தை பாடலாசிரியர் விவேகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
கங்குவா படத்தின் முதல் விமர்சனம்
அதில் பதிவிட்டு இருக்கும் அவர், " கங்குவா' படம் பார்த்து மெய் சிலிர்த்து போனேன். இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குநர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்...இந்த படத்தில் பங்கு கொண்டு பணியாற்றியதற்கு நான் பெருமை படுகிறேன். " என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.