Suriya And Jyothika: புதிய கெட்டப், மாப்பிள்ளை தோழன்..உறவினர் வீட்டு திருமணத்தில் சூர்யா - ஜோதிகா! வைரலாகும் விடியோ-suriya plays the perfect groomsman jyotika looks happy at an engagement watch - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suriya And Jyothika: புதிய கெட்டப், மாப்பிள்ளை தோழன்..உறவினர் வீட்டு திருமணத்தில் சூர்யா - ஜோதிகா! வைரலாகும் விடியோ

Suriya And Jyothika: புதிய கெட்டப், மாப்பிள்ளை தோழன்..உறவினர் வீட்டு திருமணத்தில் சூர்யா - ஜோதிகா! வைரலாகும் விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 18, 2024 09:00 AM IST

Suriya And Jyothika: உறவினர் வீட்டு திருமணத்தில் புதிய கெட்டப்பில் மாப்பிள்ளை தோழன் ஆக சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் நிற்கு சமூக வலைத்தளங்களில் விடியோ ஒன்றை சூர்யாவின் ரசிகர்கள் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

Suriya And Jyothika: புதிய கெட்டப், மாப்பிள்ளை தோழன்..உறவினர் வீட்டு திருமணத்தில் சூர்யா - ஜோதிகா! வைரலாகும் விடியோ
Suriya And Jyothika: புதிய கெட்டப், மாப்பிள்ளை தோழன்..உறவினர் வீட்டு திருமணத்தில் சூர்யா - ஜோதிகா! வைரலாகும் விடியோ

உறவினர் வீட்டு திருமணம்

சூர்யாவின் பேன் கிளப் பகிர்ந்த விடியோவில், ப்ளூ ஷர்ட் மற்றும் கருப்பு உடை அணிந்த ஹேண்ட்சமாக இருக்கும் சூர்யாவை பெர்பெக்ட் க்ரூம்ஸ்மேன் (மாப்பிள்ளை தோழன்) என குறிப்பிட்டுள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடித்து வரும் புதிய கெட்டப்பில் சூர்யா வருகை புரிந்துள்ளார். சூர்யா பக்கத்தில் கோல்டன் நிற புடவையுடன் நடிகை ஜோதிகா சிரித்த முகத்துடன் நிற்கிறார்.

தனது கையில் இருந்த மோதிரத்தை மாப்பிள்ளையிடம் நடிகர் சூர்யா தர, பின்னர் அதை வாங்கி மணமகள் கையில் அவர் அணிகிறார். சூர்யாவின் உறவினர் வீட்டு திருமண நிகழ்வின் விடியோவை அவரது ரசிகர்களை வைரலாக்கியுள்ளனர்.

இந்த திருமண நிகழ்வு திருப்பூரில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு வருகை புரிந்து சூர்யா - ஜோதிகா ஜோடியாக ரசிகர்கள் பலரும் புகைப்படமாக கிளிக்கி தள்ளியுள்ளனர்.

 

 

கங்குவா ரிலீஸ்

சூர்யா நடிப்பில் கடைசியாக கடந்த 2022இல் வெளியான படம் எட்டுத்திக்கும் துணிந்தவன். இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடித்திருக்கும் புதிய படம் கங்குவா. பேண்டஸி ஆக்‌ஷன் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தின் பணிகள் அனைத்து முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கங்குவா ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.

இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் என கூறப்படும் கங்குவா 3டி, ஐமேக் பார்மெட்களிலும் வெளியாகிறது. தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ளது.

கங்குவா படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் கேங்ஸ்டர் படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

ஜோதிகா புதிய படம்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இதன் பின்னர் 2015இல் வெளியான 36 வயதினிலே படம் மூலம் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்து வரும் ஜோதிகா தற்போது இந்தியில் உருவாகி வரும் டப்பா கார்டெல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த ஆண்டில் இவரது நடிப்பில் சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய படங்களில் இந்தியில் வெளியாகியுள்ளன. அத்துடன் இன்னும் சில புதிய படங்களிலும் கமிட்டாகியுள்ளார். கடைசியாக ஜோதிகா நடிப்பில் தமிழில் 2021இல் உடன் பிறப்பே படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து வேற்று மொழி படங்களில் தான் ஜோதிகா நடித்து வருகிறார்.

இதற்கிடையே அவ்வப்போது ஜிம் ஒர்க்அவுட் விடியோவை பகிர்ந்து வரும் ஜோதிகா, அதன் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.