‘நான் மிஸ்டர் ஒழுங்கு கிடையாது.. மெய்யழகன் கார்த்தி கேரக்டர்ல என்னால நடிக்க முடியாது’ - சூர்யா பேட்டி!
நான் சிறந்த நடிகனெல்லாம் கிடையாது. சில சமயங்களில் என்னுடைய நடிப்பு ஓவர் ஆக்டிங்காக இருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்- நடிகர் சூர்யா பேட்டி!

அண்ணன் தம்பியான சூர்யாவும், கார்த்தியும் திரைத்துறையில் நடிகர்களாக தங்களுக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். இருப்பினும் திரைத்துறை போட்டி நிறைந்தது என்பதால், இருவரையும் ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் இந்த ஒப்பீடு குறித்து சூர்யா ரெட்ரோ படம் தொடர்பாக தன்னுடைய சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசும் போது, ‘ நான் சிறந்த நடிகனெல்லாம் கிடையாது. சில சமயங்களில் என்னுடைய நடிப்பு ஓவர் ஆக்டிங்காக இருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். என்னால் கார்த்தி போலெல்லாம் நடிக்க முடியாது. என்னால் மெய்யழகன் படத்தில் கார்த்தி நடித்த கேரக்டரில் நடிக்க முடியாது.
ஒரு நடிகனாக நான் இப்படித்தான் நடிப்பேன் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்று நினைப்பேன். அந்த எண்ணத்தில்தான் ரோலக்ஸ் கேரக்டரை செய்தேன். நீண்ட நாட்களாக நான் ஒழுக்கமாக மட்டும்தான் நடிப்பேன்.. இவர் மிஸ்டர் ஒழுங்கு என்ற பிம்பமெல்லாம் உருவாகி இருந்தது. அதனை உடைப்பதற்காகத்தான் அந்தக்கேரக்டரில் நடித்தேன்’ என்று பேசினார்.
முன்னதாக, நடிகர் சூர்யா நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, அதிகம் எதிர்பார்ப்புகளுடன் வெளியான மே 1 அன்று வெளியான திரைப்படம், ரெட்ரோ. படத்தில் சூர்யாவின் லுக், கண்கவர் ஆடைகள், டிரெய்லர், கனிமா பாடல் வரை,மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில், மக்கள் ஆர்வத்துடன் படம் பார்க்க வந்தார்கள்.
ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. ஆன்லைனிலும் படத்தை கிண்டல் செய்து பலர் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தப்படம் முதல் வாரத்தில் 43 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. இந்தப்படத்தை அண்மையில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தை பாராட்டி பேசியதை கார்த்திக் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில் அவர், ‘ ‘ரெட்ரோ திரைப்படத்தை தலைவர் ரஜினிகாந்த் பார்த்து விட்டார். அவருக்கு படம் பிடித்திருந்தது. அவர் என்ன சொன்னார் என்றால், படக்குழு என்னா மாதிரியான உழைப்பை கொடுத்திருக்கிறது. சூர்யாவின் நடிப்பு சூப்பர். குறிப்பாக படத்தின் இறுதி 40 நிமிடங்கள் சூப்பர்.
படத்தில் இடம் பெற்ற சிரிப்பு தொடர்பான விஷயம் நன்றாக இருந்தது என்றார். அவரின் இந்த வாழ்த்தால் நான் பறந்து கொண்டிருக்கிறேன். லவ் யூ தலைவா’ என்று பதிவிட்டு இருக்கிறார். ஜானி படத்தில் இடம் பெற்ற ரஜினியின் தோற்றத்தை ரெட்ரோ படத்தில் கார்த்திக் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
