காட்டடி அடிக்கும் கலவை விமர்சனம்.. உலகளவில் 100 கோடி வசூலை தாண்டிய ரெட்ரோ.. அப்ப இந்தியாவில் எவ்வளவு வசூல்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காட்டடி அடிக்கும் கலவை விமர்சனம்.. உலகளவில் 100 கோடி வசூலை தாண்டிய ரெட்ரோ.. அப்ப இந்தியாவில் எவ்வளவு வசூல்?

காட்டடி அடிக்கும் கலவை விமர்சனம்.. உலகளவில் 100 கோடி வசூலை தாண்டிய ரெட்ரோ.. அப்ப இந்தியாவில் எவ்வளவு வசூல்?

Kalyani Pandiyan S HT Tamil
Published May 06, 2025 06:27 PM IST

இந்தியாவில் ரெட்ரோ திரைப்படம் வெளியான அன்றைய தினம் 19.25 கோடி வசூல் செய்த நிலையில், 2ம் நாள் 7.75 கோடி வசூல் செய்தது. அடுத்த நாளான சனிக்கிழமை 8 கோடி வசூல் செய்த நிலையில், 4 நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8 கோடி ரூபாய் வசூல் செய்தது.

காட்டடி அடிக்கும் கலவை விமர்சனம்.. உலகளவில் 100 கோடி வசூலை தாண்டிய ரெட்ரோ..  அப்ப இந்தியாவில் எவ்வளவு வசூல்?
காட்டடி அடிக்கும் கலவை விமர்சனம்.. உலகளவில் 100 கோடி வசூலை தாண்டிய ரெட்ரோ.. அப்ப இந்தியாவில் எவ்வளவு வசூல்?

இந்தியாவில் எவ்வளவு வசூல்?

இந்தியாவில் ரெட்ரோ திரைப்படம் வெளியான அன்றைய தினம் 19.25 கோடி வசூல் செய்த நிலையில், 2ம் நாள் 7.75 கோடி வசூல் செய்தது. அடுத்த நாளான சனிக்கிழமை 8 கோடி வசூல் செய்த நிலையில், 4 நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8 கோடி ரூபாய் வசூல் செய்தது.

தொடர்ந்து 5 வது நாளில் 3.4 கோடி வசூல் செய்த இந்தப்படம் 6ம் நாளான இன்றைய தினம் 1.23 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆக மொத்தமாக ரெட்ரோ திரைப்படம் இதுவரை 47.78 கோடி வசூல் செய்திருப்பதாக தெரிகிறது. இந்தத்தகவல்கள் அனைத்தும் பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் sacnilk தளம் வெளியிட்ட தகவல்கள் ஆகும்.

முன்னதாக, இந்தப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படம் குறித்தான தனது கருத்துக்களை இயக்குநர் கார்த்திக்கிடம் பகிர்ந்து இருக்கிறார்.

இதனை அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், ‘ரெட்ரோ திரைப்படத்தை தலைவர் ரஜினிகாந்த் பார்த்து விட்டார். அவருக்கு படம் பிடித்திருந்தது. அவர் என்ன சொன்னார் என்றால், படக்குழு என்னா மாதிரியான உழைப்பை கொடுத்திருக்கிறது. சூர்யாவின் நடிப்பு சூப்பர். குறிப்பாக படத்தின் இறுதி 40 நிமிடங்கள் சூப்பர்.

படத்தில் இடம் பெற்ற சிரிப்பு தொடர்பான பகுதி நெகிழ்ச்சியாக இருந்தது என்றார். அவரின் இந்த வாழ்த்தால் நான் தற்போது பறந்து கொண்டிருக்கிறேன். லவ் யூ தலைவா’ என்று பதிவிட்டு இருக்கிறார். ஜானி படத்தில் இடம் பெற்ற ரஜினியின் தோற்றத்தை ரெட்ரோ படத்தில் கார்த்திக் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கலவையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், ‘நான் எந்த விமர்சனத்தையும் பார்க்கவில்லை. காரணம், அதில் பெரும்பான்மையான விமர்சனங்களில் நம்பகத்தன்மை இல்லை. அதனால், நான் அதனை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.’ என்று பேசினார்.