Sivakumar: மீண்டும் மீண்டுமா? ‘சார் உங்களுக்கு சால்வை..’ - தூக்கி எறிந்து திட்டிய சிவகுமார்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakumar: மீண்டும் மீண்டுமா? ‘சார் உங்களுக்கு சால்வை..’ - தூக்கி எறிந்து திட்டிய சிவகுமார்!

Sivakumar: மீண்டும் மீண்டுமா? ‘சார் உங்களுக்கு சால்வை..’ - தூக்கி எறிந்து திட்டிய சிவகுமார்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 26, 2024 09:39 PM IST

காரைக்குடியில் புத்தக வெளியீட்டு விழாவில் திடீரென பழ.கருப்பையாவின் காலில் விழுந்து வணங்கிய நடிகர் சிவகுமாரால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகுமார்!
சிவகுமார்!

இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேடையில் கருப்பையா குடிநீருக்காக போராடியது, உண்ணாவிரதம் இருந்தது உள்ளிட்டவற்றை பற்றி பேசும் போது உணர்ச்சிவசப்பட்ட சிவகுமார், கருப்பையாவின் காலில் சென்று விழுந்தார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், சிவகுமார் திடீரென்று அவர் காலில் விழுந்தது பரபரப்பை உண்டாக்கியது.

அதே போல நிகழ்ச்சி முடிவில் வயதான ரசிகர் ஒருவர் சிவக்குமாருக்கு பொன்னாடை அணிவிக்க, தான் கொண்டு வந்த பொன்னாடையை அவரிடம் கொடுத்தார். அதை தடுத்த சிவகுமார் பொன்னாடையை வாங்கி தூக்கி வீசி விட்டு சென்றார். இதனால் அந்த ரசிகர் மனவேதனை அடைந்ததாக சொல்லப்படுகிறது.

முன்னதாக, மதுரையில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். அப்போது ஒரு இளைஞர் சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது கோபம் அடைந்த சிவகுமார் அந்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டார். 

இதற்கு பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தோடு, அந்த இளைஞருக்கு புது செல்போனையும் சிவகுமார் வாங்கி கொடுத்தார். ஆனால், அடுத்த ஆண்டிலும் இதே போன்ற ஒரு சம்பவத்தை செய்தார். இதற்கும் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.