தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Suriya Faching The Ball Bowled By Sachin Tendulkar, Video Gets Internet Frenzy

Suriya: சச்சின் பவுலிங்கில் பேட்டிங் செய்யும் சூர்யா - இணையத்தை தெறிக்கவிடும் வைரல் விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 07, 2024 06:56 AM IST

மும்பையில் இருக்கும் வரும் தாதோஜி கொண்டதேவ் மைதானத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் நிகழ்வில் பிரபல நடிகர்களான சூர்யா, ராம் சரண் பாலிவுட் நடிகர்களான அக்‌ஷய் குமார், போமன் இரானி உள்பட பலரும் பங்கேற்றுள்ளார்கள். சூர்யா பேட்டிங் செய்ய சச்சின் டென்டுல்கர் அவருக்கு பவுலிங் செய்யு விடியோ வைரலாகியுள்ளது.

ச்சின் பவுலிங்கில் பேட்டிங் செய்யும் சூர்யா
ச்சின் பவுலிங்கில் பேட்டிங் செய்யும் சூர்யா

ட்ரெண்டிங் செய்திகள்

பிரபலங்கள் பங்கேற்ற கண்காட்சி கிரிக்கெட் போட்டியான இதில் சூர்யாவும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்து பேட் செய்துள்ளார்கள். சச்சின் பந்தை சூர்யா பேட் செய்யும் விடியோவை பகிர்ந்திருக்கும் ரசிகர்கள் பலர் புகழ்ச்சி கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த கிரிக்கெட் லீக்கில் சென்னை சிங்கம்ஸ், டைகர் ஆஃப் கொல்கத்த, பேல்கான் ரைசர்ஸ் ஹைதராபாத், பெங்களுரு ஸ்டிரைக்கர்ஸ், ஸ்ரீநகர் கா வீர் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. மார்ச் 6 முதல் மார்ச் 15 வரை இந்த கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. டி10 போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் தலா 10 ஓவர்கள் வீசப்பட இருக்கின்றன.

சென்னை சிங்கம் அணியை சூர்யா வாங்கியிருக்கிறார். சச்சின் டென்டுல்கரும் டீம் மாஸ்டர்ஸ் 11 என்ற அணியை வாங்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்