தமிழ் சினிமா ரீவைண்ட்: சூர்யா - ஜோதிகா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம்.. மே 7 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழ் சினிமா ரீவைண்ட்: சூர்யா - ஜோதிகா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம்.. மே 7 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்

தமிழ் சினிமா ரீவைண்ட்: சூர்யா - ஜோதிகா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம்.. மே 7 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 07, 2025 05:00 AM IST

மே 7ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் சூர்யா - ஜோதிகா நடித்த சூப்பர் ஹிட் படம் வெளியாகியுள்ளது. முந்தைய ஆண்டுகளில் இந்த நாளில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈரத்த மேலும் சில படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

சூர்யா - ஜோதிகா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம்.. மே 7 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
சூர்யா - ஜோதிகா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம்.. மே 7 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்

பேரழகன்

சசி சங்கர் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, விவேக் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி ட்ராமா பாணியில் உருவாகி 2004இல் ரிலீசான படம் பேரழகன். சூர்யா வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த போது வெளியாகி, அவருக்கு முக்கிய ஹிட் படமாக பேரழகன் படம் அமைந்திருந்தது.

படத்தில் சூர்யா, ஜோதிகா என இருவரும் டபுள் ஆக்டிங்கில் நடித்திருப்பார்கள். மலையாளத்தில் திலீப் நடித்து சூப்பர் ஹிட்டான குஞ்சுகூனன் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த பேரழகன் தமிழிலும் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்துக்காக சூர்யா சிறந்த நடிகர் மற்றும் ஜோதிகா சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருதை வென்றனர். அதேபோல் சிறந்த நடிகர் பிலிம்பேர் விருதை சூர்யாவும், சிறந்த காமெடி நடிகர் பிலிம்பேர் விருதை விவேக்கும் வென்றனர்

படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்றில் பாக்ஸராகவும், இன்னொரு கேரக்டரில் கூன் விழுந்த நபராகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சூர்யா. அதேபோல் சூர்யாவின் காதலியாக ஒரு கேரக்டரிலும், பார்வையற்ற பெண்ணாக மற்றொரு கேரக்டரிலும் ஜோதிகா தோன்றி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி வரவேற்பை பெற்றன.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்

சிம்பு தேவன் இயக்கத்தில் ராகவாலாரன்ஸ், பத்மப்பிரியா, நாசர் உள்பட பலரும் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கெளபாய் தீமில் வெளியான நய்யாண்டி காமெடி படமாக 2010இல் ரிலீசானது. கெளபாய் படங்களில் இடம்பிடித்திருக்கும் அனைத்து அம்சங்களுடன், படம் வெளியான காலகட்டத்தில் இருந்த அரசியல் சூழ்நிலைகளை பகடி செய்து அமைந்திருக்கும் படத்தின் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

காமெடி ஹீரோவாக ஒரு கேரக்டரிலும், ஆக்சன் ஹீரோவாக மற்றொரு கேரக்டரிலும் ராகவலாரன்ஸ் ரசிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். படத்தின் தொடக்கம் முதல் க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பான காட்சிகளுடன் அமைந்திருந்த படம் பல்வேறு நிஜ வாழ்க்கை, சினிமா சார்ந்த ரெபரன்ஸ்களும் இடம்பிடித்திருந்தன.கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் சராசரி ஹிட்டானதுடன் ஓரளவு வசூலையும் ஈட்டியது.

மணல் கயிறு

விசு இயக்கத்தில் எஸ்வி சேகர், சாந்தி கிருஷ்ணா உள்பட பலரும் நடிக்க காமெடி ட்ராமா பாணியில் 1982இல் வெளியான படம் மணல் கயிறு. விசுவின் முதல் படமாக இது, அவரது மேடை நாடகமான மோடி மஸ்தான் கதையாக அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

மறைந்த வசனகர்த்தா கிரேஸி மோகன் தம்பி மாது பாலாஜி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவர் நடிக்க மறுக்கவே எஸ்வி சேகர் நடித்தார். படம் முழுவதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சிகளோடு அமைந்திருந்த மணல் கயிறு ட்ரெண்ட் செட்டிங் படமாகவும் அமைந்தது. விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதோடு, ரசிகர்களை கவர்ந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.